இன்று செவ்வாய்க்கிழமையோடு வந்திருக்கும் வளர்பிறை பஞ்சமி திதி. வாராகி அன்னைக்கு இந்த நாள் மிக மிக உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையோடு இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்யலாம். பண தேவை அல்லாமல் வேறு ஏதாவது கோரிக்கை இருந்தாலும் வாராகி நினைத்து நீங்கள் இந்த மந்திர வார்த்தையை சொல்லலாம் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.
இதை பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. விளக்கு ஏற்ற வேண்டாம். பூஜை செய்ய வேண்டாம். எந்த ஆன்மீகம் சார்ந்த விஷயங்களையும் செய்ய வேண்டாம். ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் மனதிற்குள் வாராகியை நினைத்து தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த இரண்டு வார்த்தையை சொன்னால் போதும். தாராளமாக ஏராளமாக பணம் உங்களை வந்து அடையும். தாராளமாக ஏராளமாக வேண்டிய வரம் உங்களை வந்து சேரும்.
வாராகிக்கு எல்லா பக்தர்களும் ஒன்றுதான். ஆகவே இவர்கள் வழிபாடு செய்தால் மட்டும்தான் வரம் கிடைக்கும் என்று கிடையாது. அதே போல வாராஹி தாய்க்கு ஐந்து ரூபாயும் ஒன்றுதான். ஐந்து கோடியும் ஒன்றுதான். யார் நம்பிக்கையோடு கேட்கிறீர்கள் என்பதில் தான் சூட்சமமே மறைந்து இருக்கிறது.
அதற்காக எடுத்த உடனேயே வாராகியிடம் 5 கோடி கேட்காதீர்கள். அது நம்முடைய தகுதிக்கு தகுந்ததா என்பதையும் ஒருமுறை சிந்தித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்நாள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள, ஒரு பொருளாதார ரீதியான தேவை இருக்கும் அல்லவா. உங்களுக்கு எவ்வளவு கடன் சுமை இருக்கிறது. நாளைய வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் தேவை. அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு ஐடியா உங்களுக்குள் இருக்கும்.
ஆனால் அந்த முயற்சிகளை செய்யும்போது பல பல தடைகள் வரும். நல்ல வேலை கிடைக்காமல் இருக்கலாம், வியாபாரத்தை எப்படி முன்னேற்றுவது என்று தெரியாத வழி இருக்கலாம். இதனால் பணத்தடை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், அந்த பண தடையை உடைத்தெரிய இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
உங்கள் முயற்சிகளில் இருக்கும் தடைகளை எல்லாம் தகர்த்துவிட்டு வருமானத்தை தேடி தரக்கூடிய வழியை அந்த வாராகிதாய் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பாள். மற்றபடி மந்திரத்தை சொல்லிவிட்டு, வீட்டில் பணமழை கொட்டும் என்று விட்டத்தை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர்களுக்கு நிச்சயம் பலன் இருக்காது. புரிந்திருக்கும் என்று நம்பி பதிவிற்குள் பயணம் செய்வோம்.
வாராஹி மந்திரம்
இன்று இரவு தூங்க செல்லும் போது “ஓம் வாராஹி அன்னையே துணை” என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். வாராகிதாய் உங்கள் மனதிற்குள் வந்து அமர்ந்து விடுவாள். அதன் பிறகு தேவையான பணத்தை வாராகியிடம் கேளுங்கள். உங்களுடைய வேண்டுகோள்களை எல்லாம் வாராகிவிடும் சொல்லிவிட்டு “ஏராளம் எண்ணிக்கை 3300” என்ற வார்த்தையை கண்களை மூடிக்கொண்டு சொல்லுங்கள்.
இந்த வார்த்தையை சொல்வதற்கு கணக்கு தேவை இல்லை. 5 நிமிடம், 10 நிமிடம் என்று நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு இந்த மந்திரத்தை சொன்னால் உங்களுடைய பணக்கஷ்டமானது தீரும். பண தேவைகள் பூர்த்தியடையும். பொருளாதாரத்தில் நீங்கள் உயர்ந்த இடத்திற்குச் செல்வீர்கள். உங்களால் முடியும் என்றால் ஒரு நோட்டுப் புத்தகத்திலோ ஒரு டைரியிலோ சுத்தமாக இருக்கக்கூடிய ஒரு பேப்பரில் மேலே “வாராஹி அம்மன் துணை” என்று எழுதிவிட்டு கீழே இந்த மந்திரத்தை உங்களால் முடிந்த வரை எழுதுங்கள்.
இதையும் படிக்கலாமே: மூன்று நாட்களில் நினைத்தது நடக்க பரிகாரம்
நிச்சயம் இந்த மந்திரத்தை எழுதி முடிப்பதற்குள்ளாகவே நல்ல செய்தி உங்கள் செவிகளில் எட்ட வாய்ப்பு இருக்கிறது. ஒரு துளி சந்தேகம் இல்லாமல், எனக்கு இந்த மந்திரத்தை எழுதுவதால், வாராஹி கும்பிடுவதால், நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பி இதை செய்தால் ஏமாற்றம் கிடையாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.