- Advertisement -
- Advertisement -

555, மூன்று 5 ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாள், பிரபஞ்சத்தின் அதிசக்தி வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதை பிரபஞ்ச வசிய நாள் என்றும் சொல்லலாம். நம்முடைய நீண்ட நாள் கஷ்டங்கள் தீர, நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற, நீண்ட நாள் நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, இதுபோல நாளை நாம் தவறவிடவே கூடாது.

இந்த நாளில் பிரபஞ்சத்திடம் வைக்கும் வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக பல பேர் மனதில் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நாம் எல்லோரும் இந்த வசிய நாளில் செய்யப்போகும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இன்று காலை 5 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்திருக்கலாம். ஆனால் அதை தவற விட்டதற்கு யாரும் வருத்தப்பட வேண்டாம். இன்று மாலை வரக்கூடிய 5:05மணியை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான். இன்று மாலை 5:05க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன.

பிரபஞ்ச வசிய நாள் பரிகாரம்

முடிந்தால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை ஒரு முறை பெற்றுக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் மனதில் குல தெய்வத்தின் பெயரை சொல்லிக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய கோரிக்கையை 5 முறை எழுத வேண்டும். ஒரே ஒரு கோரிக்கையை எழுதி வேண்டுதல் வைப்பது சிறப்பான பலனைத் தரும். ரொம்பவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் 5 விதமான கோரிக்கையை 5 முறை எழுதலாம்.

- Advertisement -

ஐந்து துண்டு சீட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துண்டு சீட்டிலும் ஒரு கோரிக்கையை 5 முறை எழுதி விடுங்கள். இந்த சீட்டை எல்லாம் அப்படியே பிரித்து படி, ஒவ்வொரு சீட்டுக்கு மேல் ஒவ்வொரு சீட்டாக அடுக்கி வைத்துவிட்டு, அதன் மேலே ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப தண்ணீரை வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் “இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி” என்று ஐந்து முறை சொல்லிவிட்டு அந்த தண்ணீரை பருகி விடுங்கள். உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். இந்த வழிபாட்டை சரியாக 5:05 மணிக்கு எப்படி செய்வது. நேரம் தவறுமே என்று கவலைப்பட வேண்டாம்.

மாலை ஐந்து மணிக்கே இந்த பரிகாரத்தை செய்ய துவங்கி விடுங்கள். சரியாக 5:05 மணி அடிக்கும்போது பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். இந்த எளிமையான பரிகாரம் இந்தபிரபஞ்சத்தின் சக்தி வாய்ந்த வசிய நாளில் செய்வது அவ்வளவு எளிதல்ல. பரிகாரத்தை செய்யவிடாமல் தடுக்க நிறைய தடைகள் வரும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி தூபம்

இருந்தாலும் நம்பிக்கையோடு இதை நீங்கள் செய்து விட்டீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் எழுதிய அந்த ஐந்து கோரிக்கைகளும் கூடிய விரைவில் நிறைவேறும். அதிகபட்சம் ஐந்து மாதத்திற்குள் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் முயற்சி எடுத்து போராடுங்கள். உங்களுடைய போராட்டத்திற்கு கடவுள் உறுதுணையாக வருவான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by