எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கிரகங்கள் அனைத்திற்கும் தலைமைத்துவம் வாய்ந்தவராகவும் இவர் திகழ்கிறார். சித்தர்களுக்கு எல்லாம் சித்தராகவும் கருதப்படுகிறார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கால பைரவரை நாம் வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக இருப்பது அஷ்டமி திதி. வளர்பிறை, தேய்பிறை என்று மாதத்தில் இரண்டு முறை வரக்கூடிய அஷ்டமி திதியில் பணவரவு அதிகரிப்பதற்கும் செல்வங்கள் சேருவதற்கும் வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் எந்த வகையில் நாம் தூபம் போட்டால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வளர்பிறை அஷ்டமி தூபம்
நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். ஒரு சிலருக்கு எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பணவரவு என்பது ஏற்படாமல் இருக்கும் அல்லது கைக்கு பக்கத்தில் பணம் வந்துவிட்டு அது நம் கையில் சேராமல் சென்று விடும் வாய்ப்புகளும் ஏற்படும். இப்படி பணவரவு ஏற்படாமல் இருப்பதற்கும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகுவதற்கும் வளர்பிறை அஷ்டமி நாளன்று போட வேண்டிய ஒரு தூபத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்று கூறப்படுகிறது. வளர்பிறை அஷ்டமியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய செல்வ செழிப்பு வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் வளர்பிறை அஷ்டமி நாளில் தான் கால பைரவரை அஷ்டலட்சுமிகளும் வழிபாடு செய்து அவர்களுடைய செல்வத்தை அதிகரித்துக் கொள்வார்களாம். அந்த நேரத்தில் நாமும் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது அஷ்டலஷ்மிகளுக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள் நமக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மே மாதம் ஐந்தாம் தேதி திங்கட்கிழமை அன்று வளர்பிறை அஷ்டமி இருக்கிறது. இது அன்று மதியம் 1:02 மணி வரை இருக்கிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் எளிமையான முறையில் வீட்டில் போடக்கூடிய ஒரு தூபம் செல்வ செழிப்பை நமக்கு அதிகரிக்கும்.
இந்த தூபத்தை போடுவதற்கு நமக்கு வெள்ளை குங்கிலியம் வேண்டும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி வந்து பொடி செய்து அஷ்டமி திதி நிறைவடைவதற்குள் வீட்டு பூஜை அறையிலும் வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். இதனுடன் நாம் சாம்பிராணியும் கலந்து கொள்ளலாம். பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றையும் கலந்து தூபம் போடும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும். மேலும் பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:எதிரிகளை வெல்ல பிள்ளையார் வழிபாடு
எளிமையான இந்த தூப வழிபாட்டை வளர்பிறை அஷ்டமி நாள் அன்று வீடு முழுவதும் போட்டு வழிபாடு செய்ய பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.