- Advertisement -

இந்த 5 விஷயங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் பேரரசனாக இருந்தாலும் கூட பிச்சைக்காரன் ஆகி விடுவானாம் தெரியுமா? அப்படி என்ன 5 விஷயங்கள்?

சில சமயங்களில் பல பழமொழிகளை உண்மைக்கு புறம்பாக பலரும் புரிந்து கொள்வது உண்டு. அந்த வகையில் ‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்கிற பழமொழி அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியுமா? ஐந்து பெண் குழந்தைகளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்று மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். எந்த ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்? என்கிற உண்மையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

1
குடும்பத்தின் பொருளாதார சூழல் தெரியாமல், ஆடம்பரமாக வாழும் தாய்! ஒரு குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவு செய்பவள் தான் நல்ல மனைவியாக இருக்க முடியும். கணவன் எவ்வளவு சம்பாதிக்கிறானோ, அதற்குள் தன் தேவைகளை முடித்துக் கொள்ளும் நல்ல மனைவியானவள், நல்ல தாயாகவும் இருக்க முடியும். ஆடம்பரமாக செலவு செய்யக்கூடிய ஒரு தாய் இருக்கும் இல்லத்தில் அரசன் இருந்தால் கூட விரைவில் ஆண்டி ஆகி விடுவான் என்பது முதல் விஷயம் ஆகும்.

- Advertisement -

2
குடும்ப பொறுப்பில்லாமல் வாழும் தந்தை! குடும்பத்தின் தலைவராக இருந்து கொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரியாக திரிந்து கொண்டிருக்கும் தந்தை இருக்கும் இல்லத்தில் எத்தகைய அரசன் இருந்தாலும், விரைவிலேயே ஆண்டி ஆகி விடுவான். குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டியவன் தந்தை! அந்த பொறுப்பு சுமையை அவன் ஏற்காவிட்டால் அக்குடும்பம் வறுமையை அடையும்.

3
அடக்கும் இல்லாத ஒழுக்கமற்ற மனைவி! ஒழுக்கம் தான் எல்லாவற்றுக்குமே முதன்மையானது. ஒழுக்கம் தவறி ஒரு மனைவியானவள் நடந்து கொண்டால் அந்த இல்லம் சிறந்த இல்லமாக நிச்சயம் விளங்காது. அடக்கம் இல்லாமல், ஒழுக்கம் தவறி வாழும் மனைவி இருக்கும் இல்லத்தில் அரசன் இருந்தால் கூட விரைவில் ஆண்டியாகி விடுவான் என்பது மூன்றாம் விஷயமாகும்.

- Advertisement -

4
உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவதும், அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய உடன் பிறந்தவர்கள் இருக்கும் இல்லத்தில் அரசன் இருந்தால் கூட ஆண்டி ஆகிவிடுவான். நம் சகோதர, சகோதரர்களையே ஏமாற்றி துரோகம் செய்து அவர்களுடைய சொத்துக்களை பறிப்பதும், அவர்களுடைய திறமைகளை பறிப்பதும், அவர்களுக்குச் சேர வேண்டிய விஷயங்களை தட்டிப் எடுப்பதும் நாம் செய்தால்! நம் வீட்டில் பேரரசர் இருந்தாலும் பிச்சைக்காரன் ஆகி விடுவார்.

5
பெரியோர் சொல் பேச்சு கேட்காத பிடிவாதம் உடைய குழந்தைகள்! எல்லா குழந்தையும் பிறக்கும் பொழுது நல்ல குழந்தையாக தான் பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை வளரும் விதமும், வளர்கின்ற தாய், தந்தையரும் தான் மீதி பொறுப்பை ஏற்க வேண்டி இருக்கிறது எனினும் அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் தன் இஷ்டத்திற்கு ஆடும் குழந்தைகள் இருக்கும் இல்லத்தில் அரசன் இருந்தால் கூட விரைவாகவே ஆண்டி ஆகி விடுவான் என்பது ஐந்தாம் விஷயமாகும்.

இப்படியான ஐந்து விஷயங்களை கொண்டுள்ளவர்கள் ஒரு இல்லத்தில் இருக்கும் பொழுது அந்த இல்லத்தில் அரசன் இருந்தால் கூட ஆண்டி ஆகி விடுவான் என்பது தான் அந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் ஆகும். ஆனால் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசனாக இருப்பவன் கூட ஆண்டி ஆகி விடுவான் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் எப்பொழுதும் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். எனினும் இந்த கால கட்டத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் எவ்வளவோ மேல் என்பதை பலரும் உணர்ந்து விட்டனர் என்பது வரவேற்கத்தக்கது.

- Advertisement -