- Advertisement -
- Advertisement -

எண்களின் அடிப்படையில் ஏற்படக்கூடிய ஒன்றாக தான் தேவதை நாள் திகழ்கிறது. அந்த வகையில் ஜூன் மாதம் என்பது ஆறாவது மாதம், ஆறாம் தேதி, அதுவும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இதை நாம் தேவதை நாள் என்று கூறுகிறோம். இந்த தேவதை நாளில் காலை 6:00 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் ஒரு சிறிய வழிமுறையை பின்பற்றி பிரபஞ்சத்திடம் நம்முடைய வேண்டுதலை வைக்கும் போது அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

666 என்பது தேவதை எண்ணாக கருதப்படுகிறது. இந்த மூன்று ஆறுகளும் ஒன்றிணைந்து வரக்கூடிய நாளாக தான் ஜூன் மாதம் 6ஆம் தேதி திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் தேவதையை நாம் வசியம் செய்வதற்குரிய ஒரு எளிமையான மந்திரமும் இருக்கிறது. அதே சமயம் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்குரிய ஒரு வழிமுறையும் இருக்கிறது. இதை நாம் சரியாக காலை 6 மணியிலிருந்து 6:06 மணிக்குள்ளும் மாலை 6 மணியிலிருந்து 6:06 மணிக்குள்ளும் செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். காலை சரியாக 6 மணிக்கு நம்முடைய இடது கையில் சுக்கிர மேடு என்று கூறக்கூடிய கட்டை விரலுக்கு கீழே இருக்கும் பகுதியில் “666 divine” என்பதை ஒரு பேனாவை பயன்படுத்தி எழுதி கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய ஆறு விதமான வேண்டுதல்களை சத்தமாக பிரபஞ்சத்திடம் கூற வேண்டும். பிறகு நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தானியத்தை எடுத்து மனதார வேண்டிக் கொண்டு வடக்கு திசை பார்த்து தூவி விட வேண்டும். இப்படி காலையில் பிரபஞ்சத்திடம் நம்முடைய 6 வேண்டுதல்களை நாம் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் மாலை 6 மணிக்கு ஒரு தட்டை வைத்து அதில் கல் உப்பை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து தீபத்தை பார்த்தவாறு தேவதையை வசியம் செய்வதற்குரிய மந்திரத்தை 66 முறை கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் நல்ல தேவதைகள் நமக்கு வசியமாவார்கள். அதன் மூலம் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும், நாம் ஏதாவது ஒரு வேண்டுதலை முன் வைத்தோம் என்றால் அந்த தேவதைகள் அதை நமக்கு நிறைவேற்றி தருவார்கள்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் சகல தேவதை வசிய வசிய சகலதோஷ நிவர்த்தி அர்த்தம் தன சக்தி காரிய சக்தி பிராத்தப்தம்”

இதையும் படிக்கலாமே:சகல பாவங்களை நீக்கும் ஏகாதசி மந்திரம்

பிரபஞ்சத்திற்கு எந்த அளவிற்கு சக்தி இருக்கிறதோ அதே அளவிற்கு தான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய தேவதைகளுக்கும் சக்தி இருக்கிறது. அதனால் தேவதை நாளான ஜூன் 6ஆம் தேதி இந்த வழிமுறையை பின்பற்றி பிரபஞ்சத்திடம் இருந்தும் தேவதையிடமிருந்தும் விரும்பியதை பெறலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -