- Advertisement -

ஏழு நாளில் நினைத்தது நடக்க ஏஞ்சல் நம்பர்

- Advertisement -

நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கிறதா இல்லையா என்று ஒரு டெஸ்ட் வைத்து பார்த்து விடுவோமா? இதை நீங்கள் ஒரு சேலஞ்சாக எடுத்து செய்தாலும் தவறு கிடையாது. நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு வேலை, நடக்காமலேயே இருக்கிறது. அந்த வேலை நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு, பின் இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

படித்த விஷயங்களை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக நீங்கள் நினைத்த அந்த நல்ல காரியம் 7 மணி நேரத்திற்குள் நடப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. விதியின் வாசத்தால் 7 மணி நேரத்திற்குள் அந்த நல்ல காரியம் நடக்கவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்குள் நிச்சயம் நீங்கள் நினைத்தது நடந்தே தீரும். நினைத்தது நடக்க நாம் செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஏழு நாட்களில் நினைத்தது நடக்க பரிகாரம்

உங்களுடைய இடது கை மணிக்கட்டு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் (left wrist). உள்ளங்கைகளுக்கு கீழ் பக்கம் உள்ள பகுதி, பதிவிற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். ஒரு பச்சை நிற பேனா அல்லது ஸ்கெட்ச் பேனாவை எடுத்து இடது கை மணிக்கட்டுப்பகுதியில் இந்த நம்பரை எழுத வேண்டும்.

“19751” இந்த நம்பரை மட்டும் பச்சை நிற பேனாவில் இடது கை மணிக்கட்டு பகுதியில் (ரேகை இருக்கும் இடத்தில்) எழுதி விடுங்கள். இந்த நம்பரை எழுதுவதற்கு முன்பு எதற்காக இந்த நம்பரை எழுதறீங்க, அப்படின்னு  ஒரு முறை பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அந்த நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைக்க வேண்டும். மொத்தமாக ஒரு நிமிடத்தில் இந்த வேலையை  எல்லாம் செய்து முடிந்து விடலாம். குலதெய்வத்தை நினைத்தும் வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இந்த நம்பரை கையில் எழுதிக் கொள்ளலாம். இந்த நம்பர் வெளியில் தெரிந்தாலும் பெருசாக எந்த பிரச்சனையும் கிடையாது. சிறிது நேரம் கழித்து அந்த நம்பர் வேலை செய்யும் போது அழிந்து போனாலும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் எந்த கோரிக்கைக்காக இந்த நம்பரை எழுதத் துவங்கினீர்களோ, அதற்கான முயற்சிகளை மட்டும் நீங்கள் விடாமல் மேற்கொள்ள வேண்டும் இவ்வளவுதான்.

முதல் நாளிலேயே நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடிந்து விட்டால் சந்தோஷம். துரதிஷ்டவசமாக நீங்கள் நினைத்தது முதல் நாள் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் 7 நாளும் இதே போல பச்சை நிற பேனாவில் இந்த நம்பரை உங்கள் கையில் எழுதி, வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைத்து வர, நிச்சயமாக நீங்கள் நினைத்தது ஏழு நாட்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முருகன் மந்திரம்

உடல் ஆரோக்கியம் பெற, கடன் கொடுக்க, வார கடன் வசூலாக, கணவன் மனைவி பிரச்சினை தீர, வீடு வாங்க நிலம் வாங்க கார் வாங்க பைக் வாங்க, எந்த வேண்டுதலை வேண்டும் என்றாலும் நீங்க இந்த நம்பரிடம் ஒப்படைக்கலாம். முழு நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நினைக்க முடியாத நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -