
கணவன் மனைவி ஒற்றுமை என்பது அந்த தேவ லோகத்தில் போடப்பட்ட முடிச்சு. இறைவனால் போடப்பட்ட முடிச்சை நம் கையால் அவிழ்க்கக்கூடாது. கணவன் மனைவி பிரிவு என்ற ஒரு வார்த்தை குடும்பத்திற்குள் வரவே கூடாது. தம்பதியாக வாழ்பவர்கள் அனைவரும் அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் நீண்ட காலத்திற்கு வாழ்வின் இறுதிவரை ஒற்றுமையாகவே வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம்.
திருமணம் ஆகி கணவன் மனைவி இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து விட்டீர்கள். ஆனால் இப்போது ஒன்று சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்றால், இந்த பரிகாரம் உங்களுக்கு. கணவன் மனைவி திருமணம் ஆகி ஒரே வீட்டில் இருக்கின்றோம். ஆனால் அன்னியூன்யமான வாழ்க்கை இல்லை கணவன் மனைவி சண்டை குடும்பத்தில் சந்தோஷம் இல்லை என்றாலும் இந்த பரிகாரம் உங்களுக்கு.
நாளை மார்ச் 8ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில், இந்த திருக்கல்யாண வைபவத்தை தொலைக்காட்சி பெட்டியில் நேரடியாக ஒளிபரப்பு செய்வார்கள். வீட்டில் இருந்தபடியே நீங்கள் அந்த திருக்கல்யாணத்தை பாருங்கள். பார்த்து முடித்த பிறகு, ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் கணவன் மனைவி இரண்டு பேர் பெயரையும் எழுத வேண்டும். ஒரு பெயருக்கு பக்கத்தில் இன்னொரு பெயரை சேர்த்து எழுதி, அந்த வெற்றிலையை சுருட்டி உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முடிந்த உடனேயே இதுபோல வெற்றிலையை தயார் செய்து, உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் போல நாங்களும் வாழ்நாளில் இணைந்து வாழ வேண்டும்.
கணவன் மனைவியான எங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். இறுதிவரை எங்கள் வாழ்க்கை பயணம் ஒன்றாகவே சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு மீனாட்சி தாய்தான் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ,கையில் இருக்கும் வெற்றிலையை பூஜை அறையில் இருக்கும் மீனாட்சி திரு உருவப்படத்திற்கு கீழே, மீனாட்சியின் பாதத்தில் வைத்துவிட்டு மனம் உருக வேண்டிக் கொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் பிரிந்திருக்கும் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்திருக்க வேண்டும். என்னதான் செய்தாலும் நாங்கள் ஒன்று சேர மாட்டோம் என்று சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த பலனும் இருக்காது.
மூன்று நாட்கள் வெற்றிலை பூஜையறையிலேயே இருக்கட்டும். வெற்றிலைக் காய்ந்த பிறகு எடுத்து அதை கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இந்த பரிகாரத்தை செய்துவிட்டு கணவன் மனைவி ஒன்று சேர முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும். (கணவனும் இந்த பரிகாரத்தை செய்யலாம் மனைவியும் இந்த பரிகாரத்தை செய்யலாம்).
இதையும் படிக்கலாமே: நாளை 8-5-2025 மீனாட்சி திருக்கல்யாண வைபவம்
ஒரே வீட்டில் இருந்து சண்டை சச்சரவோடு வாழும் கணவன் மனைவியும் இதை செய்யலாம். நிச்சயமாக அடுத்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் வைபவம் நடப்பதற்குள், உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழும். சண்டை சச்சரவோடு இருந்த உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். எலியும் பூனையுமாக இருக்கும் கணவன் மனைவிக்குள் அன்னியோன் ஏற்படும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.