- Advertisement -
- Advertisement -

நாளைக்கு அப்படி என்ன சிறப்பான நாள். கோகுலாஷ்டமி, அஷ்டமி என்பது 8வது திதி. 26-08-2024 இந்த எண்களை கூட்டிப் பாருங்கள். இரண்டு ஆறு கூட்டுத்தொகை எட்டு. எட்டாவது மாதம். 2024 எண் கூட்டுத்தொகை 8. ஆக மொத்தம் நாளைய தினம் முழுவதும் இந்த பிரபஞ்சத்தின் சக்தி இந்த எட்டு என்ற எண்ணுக்குள் அடக்கம்.

888, மூன்று எட்டு ஒன்றாக கூடி வந்திருக்கக் கூடிய, அஷ்டமி திதி நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு தாந்த்ரீக பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். மனதில் உங்கள் குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் வேண்டியது அப்படியே நடக்கும். நாளை நீங்கள் பேப்பரில் எட்டு முறை என்ன எழுதினாலும் அது அப்படியே பலிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை முறையாக நாளைய தினம் எப்படி மேற்கொள்வது. உங்களுக்கு தேவை எல்லாம் ஒரு வெள்ளை காகிதமும், எழுதுவதற்கு ஒரு பேனாவும் தான். உங்களுடைய மனதில் ஏதாவது ஒரு கோரிக்கையை நினைத்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் திங்கட்கிழமை காலை 08:08 மணிக்கு இதை எழுதலாம். தவறவிட்டவர்கள் இரவு வரக்கூடிய 08:08க்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

பூஜை வேண்டாம் விளக்கு ஏற்ற வேண்டாம் மந்திரங்கள் சொல்ல வேண்டாம். பேப்பர் பேனாவை எடுத்து ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கை மட்டும் தான் மூலதனம். எந்த நம்பிக்கையாக இருந்தாலும் அதில் குலதெய்வத்தை நாம் நினைக்க வேண்டும். குலதெய்வத்தை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு உங்களுடைய கோரிக்கையை அந்த பேப்பரில் 8 முறை எழுதுங்கள். சரியாக இந்த பரிகாரத்தை 08:08 மணிக்கு செய்ய வேண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டது. என்னுடைய கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டது. என்னுடைய நோய் நொடி பிரச்சனை தீர்ந்துவிட்டது. என்னுடைய கணவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார். என்னுடைய கணவருக்கு இருக்கும் தீய பழக்கங்கள் எல்லாம் அவரை விட்டு விலகி விட்டது.

இப்படி எல்லா நல்லதும் நடந்து விட்டதாக அந்த பேப்பரில் எழுத வேண்டும். இது ஒரு உதாரணத்திற்காக கொடுக்கப்பட்ட விஷயங்கள். உங்கள் பிரச்சனை எதுவோ அதில் ஏதாவது ஒரு பிரச்சனையை மட்டும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த பிரச்சனை சரியாகிவிட்டதாக இந்த பேப்பரில் 8 முறை எழுத வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்னுடைய ஒரு லட்ச ரூபாய் கடனையும் நான் அடைத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றேன், என்று 8 முறை எழுதுங்கள். உங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா. நான் அழகான வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறி சந்தோஷமாக வாழ்கின்றேன் என்று 8 முறை எழுதலாம்.

இப்படிதான் எட்டு முறை நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் வேண்டுதல் நிறைவேறி விட்டதாக எழுதி மடித்து பூஜையறையில் கிருஷ்ணர் அது பாதத்தில் இந்த பேப்பரை வைக்கலாம். நாளைய தினம் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை இந்த பேப்பரை எடுத்து சுருட்டி கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய கோவிலில் மண் பாங்கான இடத்தில் புதைத்து வைக்கலாம், அல்லது உங்களது வீட்டிலேயே செடி வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த செடியில் கொஞ்சமாக மண்ணை தோண்டி, இந்த பேப்பரை மடித்து அதற்குள் புதைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சகல செல்வமும் பெற ஏற்ற வேண்டிய தீபம்

எதுவாக இருந்தாலும் நீங்கள் நினைத்த அந்த வேண்டுதல் நல்லபடியாக நடந்தது என்று வேண்ட வேண்டும். நெகட்டிவ் ஆக எதையும் இந்த நேரத்தில் சொல்ல வேண்டாம். எந்த அளவுக்கு பாசிட்டிவாக இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு கூடிய சீக்கிரம் நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நிஜத்தில் நடக்கும். அதுதான் இந்த நாளுக்கு பின்னால் மறைந்திருக்கும் அதிசயம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலை முன்வைத்து ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by