- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சுபகாரியை நிகழ்ச்சிகள் நடக்க துவங்கும். காரிய தடை விலகும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வேலையில் வந்தாலும் கூடிய விரைவில் அது சரியாகிவிடும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும் அளவுக்கு பணம் கையில் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத எதிரிகள் உங்களை விட்டு தானாக விளக்குவார்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். காரியத்தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மனக்குழப்பம் நீங்கும் மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புது நண்பர்களின் அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். பண பிரச்சனை தீரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. சில பேருக்கு வாகனம் வாங்க கூடிய நல்ல நேரமும் கைக்கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பொறுப்புகளை உணர்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்லது நடக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். கட்டுமான தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சொத்து பிரச்சனைகள் சரியாகும். நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சுகபோக வாழ்வு உங்களைத் தேடி வரும் வரும். வாய்ப்புகளை தட்டி கழிக்க வேண்டாம். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். சில பேருக்கு தங்கம் வாங்கக் கூடிய யோகமும் கைக்கூடி வரும். காரிய தடை விலகும். நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை என்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். பட்ட அவமானங்கள் எல்லாம் விலகும். உங்களுக்கான கௌரவம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு இடம் மாற்றமும் ஏற்படும். சுபகாரிய தடைகள் விலகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆடம்பர செலவை குறைப்பது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். கொஞ்சம் நிதி பற்றாக்குறை ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

- Advertisement -