- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சனைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். அனுபவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய நிதானம், இன்று பலவகையான பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றி விடும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று நேர்மையாக நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உண்மையா உழைப்பீங்க. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். தேவையில்லாத நண்பர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை கொஞ்சம் அதிகமாக இருக்கும். யோசனையிலேயே பாதி நேரம் ஓடிவிடும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. தேவையில்லாமல் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவனமாக செயல்பட வேண்டும் தேவையில்லாத சிந்தனையை ஒதுக்கி வைப்பது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நேரம் கைகூடி வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் கடமை உணர்வு தவறாமல் நடந்து கொள்வீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தலைக்கு மேல் வேலை காத்துக்கொண்டிருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம் தெளிவாக இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபட்டு வாழ்க்கைக்கு என்ன தேவை, என்ன தேவையில்லை என்பதை அலசி ஆராய்ந்து ஒரு முடிவு எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கிக் கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கையோடு சேர்த்து, சுப செலவுகள் ஏற்படும். மனநிறைவு இருக்கும். பலநாள் கனவு நிறைவேறிய திருப்தியோடு, இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்கள் மீது வெறுப்புணர்வை சில பேர் காட்டுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பகை உண்டாக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை கண்ணு முடித்தனமாக நம்ப வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் துணிச்சல் வெளிப்படும். மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். நல்லது நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று சிறப்பான நாள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையான நாளாக அமையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். விவசாயிகளுக்கு இந்த நாள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் கடன் கொடுக்க வேண்டாம். பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள, அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீங்க. உங்களுடைய குடும்ப விவாகரங்களை வெளிப்படையாக அடுத்தவர்களிடம் பேசாதீங்க ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். புது முயற்சிகள் வெற்றி அடையும். புது நண்பர்களின் அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும்.

- Advertisement -