
கோ என்றால் பசு. பசுவை வழிபாடு செய்வதற்கு உகந்த அஷ்டமி திதியானது இன்றைய தினம் வந்திருக்கிறது. பெருமாளை வழிபாடு செய்பவர்கள் அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணருக்கு வழிபாடு செய்வார்கள். கிருஷ்ணருக்கு விருப்பமான உயிரினம் தான் இந்த பசு. சிவபெருமானை வழிபாடு செய்தவர்கள் அஷ்டமி திதியில் காலபைரவரை வழிபாடு செய்வார்கள். அம்பாள் வழிபாடு செய்பவர்களும் அஷ்டமி திதியில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வார்கள்.
துர்காஷ்டமி என்று சொல்லுவோம் அல்லவா. ஆகவே அஷ்டமி என்றால் கிருஷ்ண பரமாத்மா, கால பைரவர், துர்க்கை அம்பாள், இந்த 3 வழிபாடு செய்வதுமே நம்முடைய கஷ்டங்களை தீர்க்கும் என்பது அர்த்தம். ஆக இன்றைய தினத்தில் உங்களால் இந்த மூன்று இறைவனையும் வழிபாடு செய்ய முடிந்தது என்றால் இன்னும் சிறப்பு. இது தவிர இன்றைய தினம் ரொம்பவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டிய வழிபாடு கோ வழிபாடு. கோ பூஜை.
இந்த கோஷ்டாஷ்டமி தினத்தில் எந்த ரூபத்தில் ஆவது நாம் பசுவை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டு பக்கத்தில் பசு இருக்கிறது என்றால், அதனுடைய நெற்றி பகுதியை கழுவி கொள்ளுங்கள். அதனுடைய பின்பக்கத்தையும் கழுவிக் கொள்ளுங்கள். ஏனென்றால் பசுவின் பின்பக்கத்தில் தான், பசுவினுடைய வால் பகுதியில் தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
ஆகவே பசுவின் நெற்றியில் சந்தன குங்குமப்பொட்டும், பசுவிற்கு பின்பக்கம் சந்தன குங்கும பொட்டும் வைத்து, பசுவிற்கு உங்களால் முடிந்த பொருளை சாப்பிடுவதற்காக வாங்கிக் கொடுக்க வேண்டும். அந்தப் பசுவை 3 முறை சுற்றி வந்து வணங்கி, வாழைப்பழம் அகத்திக்கீரை புண்ணாக்கு இதுபோல உங்களால் என்ன வாங்கி தர முடியுமோ, அதை வாங்கி தானம் செய்து விடுங்கள்.
பசு வீட்டு பக்கத்தில் இருக்கிறது இதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றால் இதை செய்து பலன் பெறலாம். உங்களுக்கான ஐஸ்வர்யம் முழுமையாக கிடைக்கும். மகாலட்சுமி அருளாசி இன்று உங்களுக்கு முழுமையாக கிடைத்துவிடும்.
ஒரு சில பேருக்கு பசு வீட்டு பக்கத்தில் இருக்காது. பசுவை தொட்டு வணங்கக்கூடிய பாக்கியம் உங்களுக்கு இல்லை என்றால் வீட்டில் கோமாதா சிலை அல்லது கோமாதாவின் திரு உருவப்படம் இருந்தாலும், அதற்கு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து அந்த கோவமாதாவை வழிபாடு செய்யலாம் சிறப்பு. அதுவும் இல்லை என்றால் என்ன செய்வது. உங்களுடைய வீட்டில் இன்று பசுவை நினைத்து ஒரே ஒரு பஞ்சகவிய விளக்கு ஏற்றுங்கள்.
பஞ்சகவ்ய விளக்கு என்பது பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பசுவிலிருந்து எடுக்கப்பட்ட சாணம், பால், தயிர், கோமியம், நெய் இந்த 5 பொருட்களையும் சேர்த்து செய்யப்படுவது தான் பஞ்சகவ்ய விளக்கு. அந்த விளக்கில் கொஞ்சமாக நெய்விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
அந்த திரி எரிந்து அந்த விளக்கு முழுவதுமே எரிந்து சாம்பல் ஆகிவிடும். இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் முறையாக யாகம் செய்த பலனும் உங்களுக்கு கிடைக்கும். இந்த விளக்கை இன்று கோமாதாவை நினைத்து உங்களுடைய வீட்டில் ஏற்றினால் வீட்டில் இருக்கும் வறுமை நீக்கப்படும். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. பூஜை பொருட்கள் விற்கப்படும் அனைத்து கடைகளிலும் இந்த பஞ்சகவ்ய விளக்கு கிடைக்கிறது.
இதையும் படிக்கலாமே: தடைகளை தகர்த்தெறியும் கற்பூரம்
அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் இந்த பஞ்சகவ்ய விளக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோராலும் வாங்க கூடிய விலையில் தான் இந்த விளக்கு கிடைக்கும். உங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகும். குறிப்பாக இன்றைய தினம் பசுவை மனதில் நினைத்து இந்த விளக்கை வீட்டில் ஏற்றுபவர்களுக்கும் மகாலட்சுமியின் அருட்கட்ஷம் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.