எந்த ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் வராமல் இருக்க வேண்டும் என்று தான் முதலில் நினைப்போம். அப்படி தடைகள் வரும் பட்சத்தில் அந்த தடைகளால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். தொழில் தடையாக இருந்தாலும், திருமண தடையாக இருந்தாலும், பண வரவிற்குரிய தடையாக இருந்தாலும், குடும்பத்தில் நடக்க வேண்டிய சுபகாரிய தடையாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை நாம் முழுமனதோடு செய்ய நம் வீட்டில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தடைகளை தகர்த்தெறியும் கற்பூரம்
எந்த ஒரு தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும், எந்த ஒரு தெய்வத்தின் கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அனைவரும் ஒரு கற்பூரத்தையாவது வாங்கிக் கொண்டு போய் ஏற்றுவோம். எந்த ஒரு தெய்வ வழிபாட்டை நிறைவு செய்யும் பொழுதும் கற்பூரத்தை ஏற்றி தான் நிறைவு செய்வோம். தெய்வ வழிபாட்டில் கற்பூரத்திற்கு அவ்வளவு பங்கு இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் கற்பூர மட்டுமே எந்தவித மீதமும் இன்றி முழுமையாக எரிந்து முழுமையாக ஜோதியாக மாறி இறைவனிடம் போய் சேரும் என்பதுதான். அப்படிப்பட்ட கற்பூரத்தை வைத்து நம்முடைய தடைகளை எப்படி தகர்த்து எறிவது என்று பார்ப்போம்.
வாழ்க்கையிலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ, படிப்பிலோ, வேலையிலோ எதில் எந்த தடை இருந்தாலும் இந்த பரிகாரத்தை நம்முடைய வீட்டில் நாம் செய்யலாம். இந்த பரிகாரத்தை இயன்றவர்கள் தினமும் கூட செய்யலாம். செவ்வாய், வியாழன், வெள்ளி இந்த மூன்று கிழமைகளிலும் செய்யலாம். இந்த மூன்று கிழமைகளும் உகந்த கிழமையாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அதி அற்புதமான நாளாக திகழ்கிறது.
இந்த பரிகாரத்தை முடிந்த அளவிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது நல்ல பலனை தரும். வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு வீட்டின் மையப் பகுதியில் ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை சிறிதளவு ஊற்றி அதன் மேல் சுத்தமான கற்பூரத்தை போட வேண்டும். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் கற்பூரத்தில் மெழுகு சேர்த்திருக்கக் கூடாது. சுத்தமான கற்பூரமாக வாங்கி பயன்படுத்தினால் தான் அதன் பலனை நம்மால் பெற முடியும். கற்பூரத்தை நெய்யின் மேல் போட்டுவிட்டு அதை ஏற்ற வேண்டும். இது முழுமையாக எரிந்து முடிந்த பிறகு அந்த தாம்பாளத்தை எடுத்து ஓரமாக வைத்து விடலாம்.
இந்த பரிகாரத்தை நாம் தினமுமே செய்யலாம். இப்படி நாம் செய்து கொண்டே வர வர நாம் எந்த தடைகள் விலக வேண்டும் என்று நினைத்து அந்த கற்பூரத்தை ஏற்றினோமோ அந்த தடைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். இந்த மாதிரி பரிகாரம் செய்வதன் மூலம் நமக்கு ஹோமம் செய்த பலன் கிடைக்கும் என்று கூட கூறப்படுகிறது. அதனால் வெள்ளிக்கிழமை சமயத்தில் இந்த கற்பூர பரிகாரத்தை செய்யும் பொழுது நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள் என்றும் கூறப்படுகிறது.
வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்று உணர்பவர்கள் தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறையிலும் அறையின் நான்கு மூலையிலும் சாதாரண கற்பூரத்தையோ அல்லது பச்சை கற்பூரத்தையோ தூள் செய்து தூவ வேண்டும். இப்படி தூங்குவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் இது உட்கிரகித்து ஆவியாக சென்று விடும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் விநாயகர் வழிபாடு
பல மகத்துவ குணம் மிகுந்த கற்பூரத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதோடு தடைகளும் விலகி வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.