
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஈடுபடக்கூடிய வேலையில் எந்தவித தடைகளும் வராமல் நல்ல விதமாக அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்றால் அதற்குரிய நேர்மறை ஆற்றல் என்பது நம்மிடமும், நம்மை சுற்றிலும் இருக்க வேண்டும். எதிர்மறை ஆற்றல் இருக்கக்கூடிய இடத்தில் நேர்மறை ஆற்றலுக்கு இடமே இருக்காது. இந்த எதிர்மறை ஆற்றல் என்பது பல ரூபங்களில் நம்மிடம் வந்து சேரும். ஒவ்வொரு ரூபத்தையும் கண்டறிந்து அதை வராமல் தடுப்பது என்பது இயலாத காரியம். எவ்வளவுதான் பரிகாரங்கள் செய்தாலும் எதிர்மறை ஆற்றல் என்பது வந்து கொண்டே தான் இருக்கும். அதனால்தான் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்குரிய பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எதிர்மறை ஆற்றலையும் தீய சக்திகளையும் விரட்டியடிக்க கூடிய பரிகாரங்கள் பல இருக்கின்றன. அந்த பரிகாரங்களை பொதுவாக ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் தான் அதிகப்படியாக செய்வார்கள். இதற்கு காரணம் அந்த நாட்களில் தான் எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்குரிய சக்தி இயற்கையிலேயே இருப்பதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாட்களுள் அமாவாசையும், ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பலரும் அமாவாசை தினங்களில் தங்களிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் நீங்க வேண்டும் என்பதற்காக தேங்காய் உடைப்பது, பூசணிக்காய் உடைப்பது, எலுமிச்சம் பழத்தை பலி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். அதே போல் தான் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று திருஷ்டி கழிப்பதாக பலரும் பரிகாரங்கள் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமனம் ஆகி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய மூன்று பொருட்கள் இருந்தால் போதும். பெரிதாக வேறு எதுவுமே தேவைப்படாது. இதற்கு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் சிறிதளவு நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய கல் உப்பை வைக்க வேண்டும். சிறிதளவு கால பைரவருக்கு உகந்த வெண்கடுகை வைக்க வேண்டும். அதேபோல் நம்முடைய வீட்டில் அன்றைய தினத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதாவது திருஷ்டி சுத்தும் பொழுது வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில் காய்ந்த மிளகாய் வைக்க வேண்டும்.
இந்த காய்ந்த மிளகாய் நீட்டு மிளகாயாக தான் இருக்க வேண்டும். உடைந்திருக்கக் கூடாது. காம்பு இருக்கக்கூடிய மிளகாயாக பார்த்து தான் வைக்க வேண்டும். யாராவது வெளியூர் சென்றிருக்கிறார்கள் அல்லது வெளியூரில் தங்கி இருக்கிறார்கள் என்றால் அவர்களை கணக்கில் எடுக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். திருஷ்டி சுத்தும் பொழுது எத்தனை நபர்கள் வீட்டில் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில்தான் காய்ந்த மிளகாய் வைக்க வேண்டும். இப்பொழுது இந்த பேப்பரை ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர சொல்லி அவர்கள் அனைவருக்கும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் இடமிருந்து வலமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும்.
அதேபோல் நம்மை நாமே வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து ஒரு கொட்டாங்குச்சியில் நெருப்பை பற்ற வைத்து அதில் போட்டு விட வேண்டும். இது முழுமையாக வெடித்து எரியும். இப்படி எரிவதன் மூலம் நம் வீட்டிலும் நம்மிடமும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.
இதையும் படிக்கலாமே: அவசர பண தேவை பூர்த்தி அடைய
இந்த ஒரு எளிமையான எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய பரிகாரத்தை ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் தீய சக்திகளும் விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.