- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

ஆடி மூன்றாம் வெள்ளி நிலை வாசல் வழிபாடு

- Advertisement -

ஆடி மாதத்தின் சிறப்புகள் பல இருக்கின்றன. அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கிழமையும் விசேஷகரமான கிழமையாகவும் அதற்கென்று தனியாக விசேஷகரமான வழிபாடுகளும் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளைய தினம் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை இந்த தினத்தில் நாம் நம்முடைய வீட்டு நிலை வாசலில் செய்யக்கூடிய வழிபாடு என்பது அஷ்டலட்சுமிகளை நம் வீட்டிற்குள் அழைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நினைவாசல் என்பது ஒரு வீட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது பலருக்கும் தெரியும். நிலை வாசலில் தான் குலதெய்வமும் கிரகலட்சுமி என்று சொல்லக்கூடிய மகாலஷ்மியும் வீற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் லட்சுமி நரசிம்மரும் நிலைவாசலில் தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலை வாசலை நாம் எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நாளைய தினம் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு நிலை வாசலை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீரை அதனுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த தண்ணீரில் பச்சைக் கற்பூரம், ஜவ்வாது இவற்றை கலந்து அந்த தண்ணீரால் உங்களுடைய நிலை வாசலை சுத்தமாக துடைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நிறை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து இரண்டு புறங்களிலும் பூக்களை வைக்க வேண்டும். பன்னீர் இல்லாத பட்சத்தில் மல்லிகை பூவை அந்த தண்ணீரில் போட்டு வைத்து கூட நாம் உபயோகப்படுத்தலாம். பிறகு நிலை வாசலுக்கு உள்புறமாக அதாவது வீட்டிற்குள் சுத்தமாக துடைத்து தாமரை பூ கோலம் போட வேண்டும். பிறகு இரண்டு தட்டுகளை எடுத்து அதற்கு மேல் கிழியாத ஓட்டை இல்லாத நல்ல வெற்றிடையாக பார்த்து இரண்டு வெற்றிகளை வைத்து அந்த வெற்றிலைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய திரியை போட்டு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு இரண்டு புறங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு எரிய வேண்டும். மேலும் இந்த தீபத்தில் ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை, பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை போட வேண்டும். இப்படி போட்ட பிறகு நிறை வாசலுக்கு இரண்டு ஊதுபத்திகளை பொருத்தி வைத்து கற்பூர ஆரத்தி காட்டி முடித்துவிட்டு பிறகு பூஜை அறைக்கு வந்து பூஜையறையில் இருக்கக்கூடிய தெய்வங்களை நாம் வழிபாடு செய்யலாம்.

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி இயலாத பட்சத்தில் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிரஹோரையில் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளும் நம் வீட்டிற்குள் குடியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே ஆடி வெள்ளி அம்மன் மந்திரம்

மிகவும் எளிமையான இந்த நிலைவாசல் பூஜையை செய்பவர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முழு மனதுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -