- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி வெள்ளி அம்மன் மந்திரம்

ஆடி வெள்ளி அம்மன் மந்திரம்

- Advertisement -

நாளை ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை. திரும்பவும் இந்த வெள்ளிக்கிழமையை நாம் பெற வேண்டும் என்றால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அம்பாளின் அருளை பெற நாளைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டிய எளிமையான அம்பாள் வழிபாடு, எளிமையான அம்மன் மந்திரம் இதோ உங்களுக்காக.

உங்களுடைய வீட்டில் வறுமை இருக்கிறது. செல்வ வளம் குறைவாக இருக்கிறது. கணவருக்கு வருமானம் இல்லை. வீட்டில் மூதேவி அடைந்திருக்கிறாள். கடன் சுமையால் அவதிப்படுகிறீர்கள் எனும் பட்சத்தில் இந்த வழிபாட்டை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடு கோவிலாக மாறும். வீட்டில் மகாலட்சுமி குடியேறுவார்கள்.

- Advertisement -

ஆடி வெள்ளிக்கிழமை காலை 4:00 மணியிலிருந்து 5:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்திருக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசல் தெளித்து கோலம் போடவும். வீடு முழுக்க மஞ்சள் தண்ணீரை வேப்பிலை போட்டு தெளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் துரதிஷ்டம் விலகிவிடும்.

பூஜை அறையை பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு விளக்கு ஏற்றி வைத்து விடவும். அம்மனுக்கு பால் பாயாசம் நெய்வேதியமாக வைக்கலாம், அல்லது உங்களால் முடிந்த பழங்களையும் நெய்வேத்தியமாக வைக்கவும். பிறகு பின் சொல்லக்கூடிய இந்த அம்மன் மந்திரத்தை நம்பிக்கையோடு உள்ளம் உருகி 54 முறை உச்சரிக்கவும்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிக்க வேண்டிய அம்மன் மந்திரம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !
பராசக்தி பராசக்தி பராசக்தி ஓம் !
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ஓம் !
வந்திரங்கி காத்தருள்வாய் போற்றி ஓம் !

மந்திரத்தை உச்சரித்து விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து அம்பாளை வழிபாடு செய்துவிட்டு, பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் அம்பாளின் அருள் ஆசி நிச்சயம் பரிபூரணமாக கிடைக்கும். இந்த மந்திர வார்த்தைகள் வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்கும். சாதாரண வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது அம்மனை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். அம்மன் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வத்தை பாதுகாக்கும் பிள்ளையார் வழிபாடு

ஆடி வெள்ளி அன்று வீட்டில் அம்பாள் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம். உங்களுடைய குடும்ப கஷ்டம் தீருவதற்கு இந்த வழிபாடு நிச்சயம் கை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் தவறாமல் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு அம்பாளுக்கு சிவப்பு நிற பூக்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது கடன் பிரச்சனையை குறைக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்