- Advertisement -
ஜோதிடம்

ஆனி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ஐந்து ராசிகள்

ஜூன் மாதம் 15 ஆம் தேதி ஆனி மாதம் பிறக்கிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமாக ஆனி மாதம் திகழ்கிறது. மேலும் இந்த மாதத்தில் சுக்கிர பகவானும், புதன் பகவானும் மிதுன ராசியில் இணைய போகிறார்கள். அதனால் பூதாத்தியோகம், சுக்ராதியோகம் மற்றும் மூன்று கிரகங்களின் சேர்கை யோகம் போன்ற யோகங்களால் அதிர்ஷ்டத்தை பெறப் போகக்கூடிய ஐந்து ராசிகளை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மேஷம்

இந்த ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சூரியன் வரப்போகிறார் என்பதால் இந்த ராசிக்காரர்கள் தொழில் செய்யும் யோகம் என்பது சிறப்பாக இருக்கும். மேலும் புதிய வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதோடு அந்த வாய்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான ஆதரவுகரமும் உங்களைத் தேடி வரும் என்பதால் சற்று விழிப்புணர்ச்சியுடன் இருந்து இந்த மாதத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் தொழில் சார்ந்த அனைத்து விதமான நன்மைகளும் தேடி வரும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். அதனால் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், வருமானம் அதிகரிக்கும் யோகத்தையும் தரவுள்ளார். இதனால் இழந்த மரியாதையை மீட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்டம் தேடி வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனைத்து கிரகங்களின் கூட்டமைப்பால் மிகவும் யோகமான மாதமாக திகழப்போகிறது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் தங்களுடைய ஒவ்வொரு நாளையும் சமயோகிதமாக செயல்படுத்தினால் அவர்களுடைய நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சிறப்பான நல்ல பலனை பெறுவார்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் திகழ்கிறார். எனவே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் நநிலவும். நிதி நிலையில் இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும்.

மகரம்

இதுவரை இருந்து வந்த பண நெருக்கடி அனைத்தும் நீங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கடன் சுமை குறையும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே தீராத கஷ்டம் தீர மலர் வழிபாடு

மேற்சொன்ன இந்த ஐந்து ராசிக்காரர்களும் இந்த ஆனி மாதத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். இது பொது பலன் என்பதால் மேற்கொண்டு நல்ல பலனை பெறுவதற்கு தங்களுடைய சுய ஜாதகத்தை கலந்தாய்வு செய்து கொள்வது நல்லது

- Advertisement -