- Advertisement -

ஆனி மாத முதல் நாள் குலதெய்வ வழிபாடு

- Advertisement -

நாளை ஆனி மாதம் ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று பிறக்கவிருக்கின்றது. ஆனி மாதத்தை மிதுன மாதம் என்று சொல்லுவார்கள். அதாவது வெயில் குறைந்து வசந்த காலம் தொடங்கக்கூடிய காலம் இந்த ஆனி மாதம். கடவுளுக்கு இந்த ஆனி மாதம் முழுவதும் மாலை நேரம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மாலை நேரம் என்றாலே பொதுவாக எல்லோர் மனதும் சந்தோஷமாக தானே இருக்கும். கடவுளுக்கும் அப்படித்தான் இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதம். சந்தோஷத்தில் இருக்கும் இறைவனிடம் என்ன வரத்தை கேட்டாலும் சுலபமாக பெறலாம். அந்த வகையில் இந்த ஆனி மாதத்தில் நீங்கள் செய்யும் இறைவழிபாடு உங்களுக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பது ஆன்மீகத்தின் நம்பிக்கை.

- Advertisement -

ஆனி முதல் நாள் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

நாளைய தினம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்‌. பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் ஒரு தட்டில் கொஞ்சமாக பச்சரிசியையும் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை ஏதாவது போட்டு கலந்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வத்தை வழிபாடு செய்யும்போது மறக்காமல் முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். வழிபாடு செய்யும்போது உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை கட்டாயம் மூன்று முறையாவது உச்சரிக்கவும்.

- Advertisement -

குடும்பத்தோடு இந்த வழிபாட்டை செய்யவும். இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு தட்டில் இருக்கும் அந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் கொண்டு போய் உங்கள் கையால் பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாடு எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இரண்டு வாழைப்பழமோ அல்லது ஒரு கட்டுக் கீரையோ வாங்கி உங்கள் கையால் பசு மாட்டிற்கு நாளைய தினம் மறக்காமல் தானம் கொடுத்து விடுங்கள்.

அதேபோல நாளை நீங்கள் மதியம் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பாடு சமைத்த பிறகு, அந்த சாதத்தை எச்சில் படாமல் கொஞ்சம் காகத்திற்கு வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். நிச்சயமாக உங்களுடைய கர்மா குறையும். இந்த ஆனி மாதம் என்று மட்டும் கிடையாது. ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் காலை நேரத்தில் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் நினைத்து, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்வது, குடும்பத்திற்கு நன்மையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் பச்சை கற்பூர பரிகாரம்

அதேபோல இந்த ஆனி மாதம் முழுவதும் சிவன் வழிபாடு செய்யலாம். பெருமாள் வழிபாடு செய்யலாம். அம்பாள் வழிபாடு செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் முடிந்தால் குடும்பத்தோடு இந்த மாதத்தில் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய தடை விளக்கும். குடும்பத்தில் தீரா கஷ்டங்கள் இருக்கும் பட்சத்தில் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -