
ஆனி மாதத்தில் நாம் பணம் சேருவதற்காகவும், குடும்பத்தில் நன்மைகள் ஏற்படுவதற்காகவும் பலவிதமான பரிகாரங்களையும், வழிபாடுகளையும் மேற்கொள்வோம். அந்த வகையில் தங்கம் நம்மை வந்து சேருவதற்கும் ஒரு மந்திர வழிபாடு இருக்கிறது. இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் ஆனி மாதம் முழுவதும் மேற்கொள்பவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் தங்கம் அவர்கள் வீடு தேடி வரும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது தங்கம் வாங்க வேண்டும் என்பதுதான். தங்கத்தை வாங்குவதற்கு பணம் மட்டும் இருந்தால் பத்தாது இறைவனின் அருளும் பரிபூரணமாக வேண்டும். அப்படி தங்கம் வாங்குவதற்கும் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்கத்தை திருப்பி வீட்டிற்கு கொண்டு வருவதற்கும் ஆனி மாதத்தில் நாம் சொல்ல வேண்டிய ஒரு மந்திரம் இருக்கிறது. அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த மந்திரத்தை ஆனி மாதம் முழுவதும் நாம் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு நம்பிக்கையுடன் ஆத்மார்த்தமாக இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக கூறும்பொழுது அந்த மந்திரத்தின் பலனால் நாம் நினைத்தது போல் தங்கம் நம் வீடு வந்து சேரும் என்று கூறலாம். இந்த மந்திரத்தை காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்த பிறகு நம்முடைய வீட்டின் வடக்கு திசையில் வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
இந்த மந்திரத்தை குறைந்தது 10 நிமிடமாவது நாம் கூற வேண்டும். நிறுத்தி நிதானத்துடன் தங்கம் நம்மிடம் வந்து கொண்டே இருப்பதைப் போல கற்பனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 10 நிமிடம் மனதிற்குள் கூற வேண்டும். இந்த மந்திரத்தை சத்தமாக கூறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி மனதிற்குள் கூறிவிட்டு வானத்தைப் பார்த்தவாறு வாயால் காற்றை மூன்று முறை ஊதி விட வேண்டும். இப்படி மனதிற்குள் நாம் கூறிய மந்திரம் சக்தி வாய்ந்ததாக மாறி பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுடன் இணைவதன் மூலம் நம் வீட்டில் தங்கம் சேர்வதற்குரிய வாய்ப்புகளை பஞ்சபூதங்கள் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
“ஓம் ஸ்வர்ண குபேராய நமஹ”
இதையும் படிக்கலாமே: சாதம் வடிக்கும் போது பெண்கள் பின்பற்ற வேண்டியவை
நாம் எந்த செயலை செய்வதற்காக எவ்வளவு முயற்சி செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால்தான் அது நிறைவேறும். மேலும் தெய்வத்தின் அருளோடு பஞ்சபூதங்களின் அருளையும் நாம் பரிபூரணமாக பெற்றால் நாம் நினைத்தது நினைத்தபடி நடந்திடும். அந்த வகையில் இந்த மந்திர உச்சாடலை செய்து ஆனி மாதம் நிறைவடைவதற்குள் தங்கத்தை வீட்டில் சேர்த்து வைக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.