- Advertisement -
- Advertisement -

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் விசேஷகரமான ஞாயிற்றுக்கிழமையாக திகழ்கிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. பலரும் அன்றைய தினம் விரதம் இருந்து சூரிய பகவானை வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று திருவோண நட்சத்திரம் சேர்ந்து வருகிறது. அந்த தினத்தை கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு ஆனது நம்முடைய தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆவணி கடைசி ஞாயிறு வழிபாடு

பொதுவாகவே திருவோணம் நட்சத்திரம் என்பது பெருமாளுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த திருவோண நட்சத்திரம் மகர ராசியில் வரும். திருவோணம் என்பது சந்திரனையும் மகர ராசி என்பது சனியையும் குறிக்கக்கூடியதாக திகழ்கிறது. பொதுவாகவே திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை நாம் வழிபாடு செய்தோம் என்றால் தொழில் சிறப்பாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரியதாகவும், சூரிய பகவானை வழிபாடு செய்யும்பொழுது அதிகாரத் தன்மை என்பது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து ஒன்றாக வரும் நாளில் பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

சூரிய பகவானை சூரிய நாராயணன் என்று பெருமாளுக்கு உரிய நாமத்தை சேர்த்து தான் நாம் கூறுவோம். அதனால் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு சூரிய பகவானின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திர நாள் வரும் சமயத்தில் பெருமாளுக்கு நாம் பவள மல்லியை சூட்ட வேண்டும். பவளமல்லி என்பது பெருமாளின் மறுவடிவம் என்றே கூறப்படுகிறது. பவளமல்லி கிடைக்காதவர்கள் வெள்ளை நிற மலர்களை சூட்டலாம். அதோடு சேர்த்து வாசனை மிகுந்த மரிக்கொழுந்தையும் சூட்ட வேண்டும்.

இந்த வெள்ளை நிறம் என்பது சந்திரனுக்குரிய நிறமாக கருதப்படுகிறது. இப்படி பெருமாள் ஆலயத்திற்கு சென்று இந்த மலர்களை கொடுத்து பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தைராய்டு பிரச்சினையும், ஆண்களுக்கு ஏற்படக்கூடிய சிறுநீரகப் பிரச்சினையும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டில் நின்ற கோளத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பெருமாளுக்கு பால் பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து பெருமானின் 108 நாமங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த பால் பொங்கலை அருகில் இருக்கக்கூடிய ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி அன்றைய தினம் வழிபாடு செய்யும்பொழுது பெருமானின் அருளால் தொழில் சிறப்பாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே:மாற்றத்தை தரும் மகாலட்சுமி வழிபாடு

திருவோண நட்சத்திர நாளன்று பெருமாளை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளும், சனி பகவானின் அருளும், சூரிய பகவானின் அருளும், சந்திர பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -