
பிரதோஷம் என்பதை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும் என்றும் அதிலும் குறிப்பாக சனி பிரதோஷம் என்பது மிகவும் விசேஷகரமான பிரதோஷமாக திகழ்கிறது என்றும் பலரும் அறிந்திருப்போம். அந்த பிரதோஷ தினத்தன்று நாம் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாளை வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று எந்த முறையில் வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பிரதோஷம் என்றாலே தோஷங்களை நீக்கக்கூடிய ஒன்று என்று கூறப்படுகிறது. தோஷங்களில் ஒன்றாக கருதப்படுவது தான் கடனும். அதனால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்களும் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ளலாம். பூச நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய சனிக்கிழமை அன்றுதான் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார் என்பதால்தான் சனிக்கிழமை பிரதோஷம் என்பது மிகவும் விசேஷமான பிரதோஷமாக கருதப்படுகிறது. அதிக பலன் தரக்கூடிய பிரதோஷமாக கருதப்படுகிறது.
பூச நட்சத்திரம் என்பது சனிபகவானுக்குரிய நட்சத்திரமாகவும் கடக ராசிக்குரிய நட்சத்திரமாகவும் திகழ்கிறது என்பதால் சனிக்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம் என்பது மிகவும் விசேஷமான பிரதோஷமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. பூச நட்சத்திரத்திற்குரிய ராசியாக கருதப்படுவது கடக ராசி, கடக லக்னத்தில் யார் ஒருவர் கடனை அடைக்கிறாரோ அவருக்கு விரைவிலேயே கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கடக லக்னம் என்பது நாளை சனி பிரதோஷ அன்று வருகிறது. மாலை 3:52 க்கு ஆரம்பித்து 6:05க்கு கடக லக்னம் என்பது நிறைவடைகிறது. இது சரியாக பிரதோஷ நேரத்துடன் ஒத்து வருகிறது. அதனால் பிரதோஷ நேரத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கக்கூடிய அந்த நேரத்தில் நம்முடைய கடனிலிருந்து ஒரு சிறிய தொகையாவது நாம் செலுத்தும் பொழுது அந்த கடன் சுமை என்பது அடுத்த பிரதோஷத்திற்குள்ளேயே காணாமல் போவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
இதோடு வராகி அம்மனையும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் வராகி அம்மனுக்குரிய நட்சத்திரமாக ஆயில்ய நட்சத்திரம் திகழ்கிறது. ஆயில்ய நட்சத்திரம் செவ்வாய் பகவானுக்குரிய நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. செவ்வாய் என்பது கடன் ரீதியான பிரச்சினைகள், நோய்கள் போன்றவற்றிற்கு அதிபதியாக திகழ்கிறார். அதனால் செவ்வாய் பகவானால் பாதிக்கப்பட்டு கடன், நோய் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பிரதோஷ தினத்தன்று வாராகி அம்மனுக்கு ஒரே ஒரு நெய் தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலும் கடன் பிரச்சினைகள் தீரும்.
இதையும் படிக்கலாமே நாளை ஆவணி 1, விஷ்ணுபதி புண்ணிய காலம் 2024.
சனி பிரதோஷ தினத்தன்று இந்த முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்வதோடு கடனையும் அடைக்க முயற்சி செய்தோம் என்றால் விரைவிலயே கடன் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் வெளிவர முடியும். நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.