ஏகாதசி விரதத்திற்கு இணையானது இந்த விஷ்ணுபதி புண்ணியகால விரதம் என்று சொல்லலாம். மாதம் தோறும் தேய்பிறை ஏகாதேசி, வளர்பிறை ஏகாதேசி வரும். அதுபோல வருடத்தில் நான்கு நாட்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. அந்த வகையில் நாளைய தினம் ஆவணி 1 ம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வந்திருப்பது மிக அற்புதம்.
பெருமாளுக்கு உரிய சனிக்கிழமையே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வந்திருப்பதால் இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வது பல மடங்கு பலனை நமக்கு கொடுக்கும். இந்த சிறப்பு வாய்ந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடை எப்படி மேற்கொள்வது, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு 2024
உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலில் நாளைய தினம் ஆவணி 1 ஆம் தேதி காலை 10 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 27 முறை பெருமாளை கொடிமரத்தோடு சேர்த்து வளம் பெற வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி இலைகள், வாசம் நிறைந்த பூக்களை வாங்கிக் கொடுக்கவும். தாயாருக்கு மல்லிகைப் பூ வாங்கி தாங்க.
வழிபாட்டை மன நிறைவோடு செய்யுங்க. 27 முறை பெருமாளை வளம் வரும்போதும் உங்கள் மனதில் எந்த சஞ்சலமும் இருக்கக்கூடாது. பெருமாளின் நாமத்தை தவிர வேறு நாமத்தை உங்கள் வாய்கள் உச்சரிக்கக் கூடாது. உங்களுடைய மனது பெருமாள் மீது மட்டும்தான் இருக்க வேண்டும். பெருமாளின் ஏதாவது ஒரு நாமத்தைச் சொல்லிக் கொண்டு கோவிலை வளம் வாருங்கள். ‘கோவிந்தா கோவிந்தா’ என்று சொன்னாலும் புண்ணியம் தான்.
இந்த 27 முறை கணக்கின் மீது மனது போகும். வழிபாட்டை செய்வதில் ஆர்வம் இருக்காது. அதற்காக என்ன செய்வது. 27 பூ, 27 மொச்சை, அல்லது 27 துளசி இலைகளை கூட நீங்கள் கணக்குக்காக உங்கள் கைகளில் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை பெருமாளை சுற்றி வரும் போதும் ஒவ்வொரு பூக்களை கொடி மரத்தில் வைத்து விடுங்கள்.
கையில் இருக்கும் பூ காலியாகும் போது 27 சுற்று நிறைவடைந்தது என்று அர்த்தம். வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு பெருமாளையும் தாயாரையும் மனதார தரிசனம் செய்துவிட்டு, நமஸ்காரம் செய்து, சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து உங்கள் பிரார்த்தனையை வைத்தால் உங்கள் தலை எழுத்து மாறும்.
இதையும் படிக்கலாமே: காரிய சித்தி ஏற்பட விநாயகர் வழிபாடு
வாழ்நாள் முழுவதும் நான் கஷ்டத்தை மட்டும் தான் பார்த்திருக்கின்றேன் என்றாலும் அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்கு உண்டான வழியை, அந்த பெருநாள் உங்களுக்கு காட்டுவார். இப்படி 27 முறை வளம் வந்துவிட்டால் கோடி கணக்கில் பணம் கொட்டும் என்று சொல்ல வரவில்லை. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் குறையும் பெருமாள் உங்களுக்கு நல்ல நல்ல சந்தர்ப்பங்களையும் சூழ்நிலையும் உண்டாகி வழிகாட்டி தருவார், என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.