- Advertisement -

பெரும்பாலும் அனைவரும் ஆலயம் சென்று வழிபடுவது தங்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தரும் படி கேட்கத் தான். அதே போல் தான் வீட்டில் செய்யப்படும் பூஜைகளும் நம்முடைய வாழ்வை வளமாக்க தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது அந்த கடவுளின் அனுகிரகம். அது இருந்தால் மட்டுமே நாம் நினைப்பவையும், கேட்பவையும் கிடைக்கும்.

அப்படியான அந்த அன்னையே நம் வேண்டுதலுக்கு இணங்கி நம் மனக்கண் முன் காட்சி தருவார் என்றால் அதை விட வேறு எந்த உலகத்தில் வேறு என்ன இருக்கிறது. அனுதினமும் அன்னையை நினைத்து வழிபடும் பக்தர்கள் கோடான கோடி பேர் இருக்கையில் இந்த ஒரு எளிய வழிமுறையை பின்பற்றினாலே அன்னையின் தரிசனத்தை காண முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அன்னையின் அருட்காட்சியை காண அபிராமி அந்தாதி

அன்னையின் அருட்காட்சியை நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அந்த பாடலானது அபிராமி அந்தாதி தான். இதில் உள்ள சில வரிகளை நாம் வெள்ளிக்கிழமை அன்று அன்னையை நினைத்து பாடும் போது அன்னையின் அருட்காட்சி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டின் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள் நீங்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து அபிராமி பட்டர் அருளிய அருந்ததியின் இந்த வரிகளை அன்னையை நினைத்து கண் மூடி மனதார பாட வேண்டும்.

- Advertisement -

அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

பொருள்:
கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!

- Advertisement -

இந்தப் பாடலை தெரிந்தவர்கள் அன்னையை நினைத்து பாடுங்கள். தெரியாதவர்கள் யூடியூபில் போட்டு விட்டு அன்னையை நினைத்து மனதார கேளுங்கள். இதை முடிந்த வரையில் மனப்பாடம் செய்து நீங்களே சொல்ல முயற்சி செய்யுங்கள். அது தான் விரைவில் சிறந்த பலனை உங்களுக்கு கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சகல சௌபாக்கியத்தையும் தரும் வழிபாடு

அன்னையின் தரிசனத்தை காண எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை யாரும் யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அப்படியான காட்சியை மனக்கண் முன் கொண்டு வர இந்த அபிராமி அந்தாதி உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இதை பாடினால் அன்னையின் அருள் ஆசி பெறலாம்.

- Advertisement -