- Advertisement -

ஒருவரிடம் இருந்து நாம் பணத்தை வாங்கினாலும் அதை கடன் என்று தான் கூறுவோம். அதேபோல் நாம் ஒருவருக்கு பணத்தை கொடுத்தாலும் அதையும் கடன் என்று தான் கூறுவோம். பணத்தை கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அது மறுபடியும் திரும்ப உரியவரிடம் சேரும் வரை அது கடனாகவே கருதப்படுகிறது. இப்படி பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப பணத்தை பெறாமல் கஷ்டப்படுவதும் பணத்தை வாங்கியவர் திரும்ப பணத்தை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதும்தான் கடன் பிரச்சினை என்று கூறப்படுகிறது.

இந்த கடன் பிரச்சனையை நீக்குவதற்கு என்று பல வழிமுறைகள் இருந்தாலும் கடன் கொடுத்தவருக்கு என்று தனியாகவும் கடனை வாங்கியவருக்கு என்று தனியாகவும் தான் பரிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இவை இரண்டிற்கும் ஒரு சேர செய்யக்கூடிய ஒரு எளிமையான அஷ்டலட்சுமி தீப பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பணம் என்ற ஒன்றால்தான் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. எந்த அளவிற்கு சுகங்கள் இருக்கிறதோ அதே அளவிற்கு கஷ்டங்களும் இருக்கிறது. பெரிய கோடீஸ்வரராக திகழ்பவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. இப்படி பணம் ரீதியாக ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.

இந்த வழிபாட்டு முறையை நாம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று தான் செய்ய வேண்டும். நம்முடைய வீட்டு பூஜை அறையில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஸ்ரீ சக்கரம் வேண்டும். அதேபோல் அஷ்ட லட்சுமி விளக்கு வேண்டும். இவை இரண்டையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பாள தட்டை எடுத்து அந்த தாம்பாள தட்டு முழுவதும் செவ்வரளி மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஸ்ரீ சக்கரத்தை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைப்பது போல் சந்தனத்திற்கு பதிலாக கண்ணிற்கு வைக்கும் கண்மையை வைத்து தாழம்பூ குங்குமத்தை வைக்க வேண்டும். இதே போல் தான் அஷ்டலஷ்மி தீபத்திற்கும் பொட்டு வைக்க வேண்டும். இப்படி வைத்து விட்டு ஸ்ரீ சக்கர பீடத்தை எடுத்து செவ்வரளி பூக்களின் நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பீடத்திற்கு மேலே அஷ்டலஷ்மி விளக்கை வைக்க வேண்டும்.

அஷ்டலட்சுமி விளக்கில் பொன்னாங்கண்ணி தைலத்தை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாம் யாரிடம் இருந்து கடன் வாங்கினோமோ அல்லது யாரிடம் கடனை கொடுத்து இருக்கிறோமோ அவர்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி இந்த ஸ்ரீ சக்கரத்திற்கு கீழே வைத்து விட வேண்டும். இந்த தீபச்சுடரொளியை பார்த்து மனதார நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை நாம் மேற்கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் கடன் ரீதியாக எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: மன அமைதியும் நிம்மதியும் பெற வழிபாடு

முழு நம்பிக்கையுடன் செய்யக்கூடிய இந்த அஷ்டலட்சுமி தீப வழிபாட்டை மேற்கொண்டு கடன் என்ற வார்த்தையை நம் வாழ்க்கையில் வராமல் பார்த்துக் கொள்வோம்.

- Advertisement -