- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலை நேரம்.

நம் மனதில் நினைத்த வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா? நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஒரு ரகசிய நேரம் இருக்கின்றது. அது மாதத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ வரக்கூடிய சோடசக்கலை நேரம் தான். அகத்திய முனிவரின் பாடல் மூலம் இந்த உலகிற்கு கூறப்பட்டது சோடசக்கலை. இந்த சோடசக்கலை என்றால் என்ன? இந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் நினைத்ததை எப்படி சாதித்துக் கொள்ளலாம். என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

வளர்பிறையில் பிரதமை முதல் பௌர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகளும் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்ற அர்த்தமும் உண்டு. ஆனால் இந்த 15 அல்லாமல் 16 வதாக ஒரு கலை உள்ளது. அதையே சோடசக்கலை என்று கூறுகின்றோம். பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்த அம்சமானவர் தான் திருமூர்த்தி. இந்த சோடசக்கலையின் அருளினை திருமூர்த்தி 5 நொடிகள் மட்டுமே அருளுகின்றார். ஐந்து சொடக்கு போடும் நேரம் மட்டும் திரு மூர்த்தியின் அருள் இந்த உலகம் எங்கும் பரவும். சோடச கலையானது சித்தர்களாலும், முனிவர்களாலும் அறியப்பட்டு இருந்ததால் தான் அவர்களால் விரும்பியவற்றை பெற முடிந்தது.

- Advertisement -

அமாவாசை எப்பொழுது முடிகின்றது என்பதை பஞ்சாங்கப்படி கணித்து பத்திரிகைகளிலோ அல்லது தின காலண்டரில் வெளிபடுத்தி இருப்பார்கள். அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக அமாவாசை காலை 10.30 வரை இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, அதாவது  9.30 முதல் 11.30 வரையிலான இந்த இரண்டு மணி நேரத்தில் நாம் தியானத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஒரு ஐந்து நொடிகள் தான் திருமூர்த்தி அருளினை அருளுவார். இந்த நேரம்தான் சோடசக்கலை நேரமாக கூறப்படுகிறது.

அந்த ஐந்து நொடியில் இந்த பிரபஞ்சமே திருமூர்த்தியின் ஆளுகையில் தான் இருக்கும். இந்த பூமியில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒரு ஐந்து நொடி ஒரு சூட்சுமத்தில் அதிரும். அந்த நேரத்தில் நாம் மனதில் எதை நினைத்துக் கொண்டு தியானம் செய்கின்றோமோ அது நிச்சயம் நடக்கும். ஆனால் அந்த வேண்டுதல் ஏதாவது ஒன்றை நோக்கி தான் இருக்க வேண்டும். பலவகையான வேண்டுதல்களை வைக்கக்கூடாது. இதேபோன்று தான் பௌர்ணமி முடிந்து வரும் பிரதமை திதியில் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி அமாவாசை பிரதமை திதியும், பவுர்ணமி பிரதமை திதியிலும் நம் கோரிக்கைகளை வைக்கும்போது சிலருக்கு ஒரு முறையிலேயே அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். சிலருக்கு பல மாதங்கள் எடுக்கும். இது உங்களின் மனவலிமையை பொறுத்தது.

இந்த சோடசக்கலை தியானத்தை நம் வீட்டிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம். தியானத்தின் போது அந்த இடம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவசியம். வெறும் தரையில் உட்காராமல் ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது துணி விரித்து அமர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

தியானத்தின்போது அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக ஆடை அணியக்கூடாது. வடகிழக்கு திசையை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபடலாம். நோய் தீர வேண்டும், செல்வந்தர்களாக வேண்டும், கடன் தீர வேண்டும், இப்படி எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒன்றினை மட்டும் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த சோடசக்கலையினை மனிதர்களாக பிறந்த யார் வேண்டுமானாலும் செய்து பலனைப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Shodasa kalai time. Shodasa kalai neram in tamil. Shodasa pooja vidhi in tamil.

- Advertisement -