- Advertisement -

5-5-2024 ஆம் தேதி பண தேவையை பூர்த்தி செய்ய பரிகாரம்

- Advertisement -

கடவுள் நமக்காக கொடுத்திருக்கும் ஒவ்வொரு நாளுமே நல்ல நாட்களாக தான் சொல்லப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சில நாட்கள் நமக்கு மேலும் மேலும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய நாட்களாக அமையும். அந்த வகையில் 5-5-2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குபேரருக்கு சொந்தமான, ஐந்தாம் எண்னை அடிப்படையாக வைத்து வந்திருக்கிறது.

நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் தீர, அந்த நாளில் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஐந்து என்பது பண தேவதைக்கு உரிய எண்ணாக சொல்லப்பட்டுள்ளது. குபேரருக்கு சொந்தமான எணணாகவும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

5-5-2024 அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த நாளில் நாம் பரிகாரம் செய்ய ஒரு கிழிசல் இல்லாத பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பிரியாணி இலையில் 5 5 5 என்ற எண்ணை எழுதிவிட்டு, அதற்கு கீழே உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறதோ, அந்த பணம் சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எழுதலாம்.

உதாரணத்திற்கு உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்றால், அந்த ஐந்து லட்ச ரூபாய் பணம் தேவை என்று அந்த பிரியாணி இலையில் எழுத வேண்டும். பிறகு அந்த பிரியாணி இலையை கையில் வைத்துக் கொண்டே, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை ஐந்து முறை சொல்லுங்கள்.

- Advertisement -

பண வசிய மந்திரம்

ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்

ஐந்து முறை மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லும் போது அந்த வேண்டுதலானது 55 நாட்களில் நடக்கும் என்பது தான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். மந்திரத்தை சொல்லிவிட்டு அந்த பிரியாணி இலையை ஒரு நோட்டு புத்தகத்துக்கு உள்ளே வைத்து ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய அந்த பண தேவை பூர்த்தியானதும் அந்த பிரியாணியிலேயே எடுத்து நெருப்பில் பொசிக்கி விடலாம். இவ்வளவு சூட்சமமான பரிகாரத்தை 5-5-2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எந்த நேரத்தில் செய்யணும் தெரியுமா.

ஐந்தாம் தேதி, ஐந்தாம் மாதம், ஞாயிற்றுக்கிழமை காலை 5:55 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய கஷ்டம் உடனடியாக தீரும். காலை 5:55 க்கு இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள், மாலை 5:55க்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த தேதியில் மாலை நேரத்தில் பிரதோஷமும் சேர்ந்து இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் சுபிக்ஷம் உண்டாக தீபம்

ஆகவே அந்த நேரத்திலும் நமக்கு அற்புதமான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் பண கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள். நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -