- Advertisement -

அடகு வைத்த நகையை திருப்ப சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு பொட்டு தங்கம் வாங்குதே பெரும் பாடாக உள்ளது. அப்படி இருக்கையில் பாடுபட்டு சேர்த்த தங்க நகையை அவசர தேவைக்காக அடகு வைத்த பின்பு அதை மீட்ட முடியாமல் தவிப்பது அதை விட மிகவும் கொடுமையானது. இக்கட்டான இந்த சூழ்நிலையை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரும்பாடுபட்டு சம்பாதித்த நகையை அடகு வைப்பதே பெரும் துயர் என்றால் அதை மீட்க முடியாமல் போவது அதைவிட வேதனை தானே. அப்படியான இந்த துயர் நீங்கி அடகு நகை விரைவில் வீடு தேடி வர சொல்ல வேண்டிய ஒரு பதிகத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

அடகு நகையை மீட்க செய்ய வேண்டியது

நாம் நகையை வாங்கும் பொழுது நாம் எப்படி நல்ல நேரம், காலம் எல்லாம் பார்த்து வாங்குகிறோமோ, அதே போல நகையை அடகு வைக்கும் பொழுதும் ஒரு சில விஷயங்களை கவனித்து தான் செய்ய வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு நகையை அடமான வைத்துவிட்டு அதன் பிறகு அதை மீட்க முடியாமல் அவதிப்படுவதில் ஒரு புரோஜனமும் இல்லை. அதே போல ஒரு சிலருடைய ஜாதக கூற்றின்படி அவர்கள் கையாளோ அல்லது அவர்கள் பெயரிலோ நகையை அடகு வைத்தால் அதை திருப்ப முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஆனால் அவசர தேவை என்று வரும் பொழுது நேரம் காலம் வேண்டுமானால் பார்க்கலாமே தவிர, அந்த நேரத்தில் நாம் அடகு வைக்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற ஜாதகம் சார்ந்த விஷயங்களை நம்மால் பார்க்க முடியாது என்பதும் உண்மை தான். சரி அவசரத்திற்கு நகை அடகு வைத்து விட்டோம். இப்போது அதை எப்படி திருப்புவது என்று தவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த சில வழிமுறைகளையும்
கடைப்பிடித்தால் நகையை விரைவில் திருப்பக்கூடிய வாய்ப்பு வரும் என்று சொல்லப்படுகிறது.

அடகில் இருக்கும் தங்க நகையை முழுவதுமாக உங்களால் திருப்ப முடியாவிட்டாலும் அதில் ஏதேனும் ஒரு சிறிய தங்கத்தையாவது திருப்ப முயற்சி செய்ய வேண்டும். அதையும் ரேவதி நட்சத்திரம் வரும் நாள் அன்று செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் ரேவதி நட்சத்திரம் இருந்தால் மட்டும் போதும் மற்ற நேர காலம் எதுவும் இதற்கு பார்க்க வேண்டாம். இது அடகு நகை விரைவில் திரும்ப ஒரு வழியாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

மற்றொரு வழி குளிகை நேரத்தில் நகையை திருப்புவது. இந்த குளிகை என்பது தினமும் வரக்கூடிய ஒன்று தான். அதாவது ஒவ்வொரு நாளிலும் ராகு காலம், எமகண்டம், நல்ல நேரம் என எப்படி வருகிறதோ, அதே போல் குளிகை என்ற ஒரு நேரமும் வரும். அந்த நேரத்தில் நீங்கள் அடகு வைத்த நகையில் ஒரு சிறிய குண்டுமணி அளவு தங்கத்தையாவது திருப்ப முயற்சி செய்தால் அந்த முயற்சி திரும்பத் திரும்ப வெற்றி பெற்று, நகைகள் விரைவில் வீடு வந்து சேர்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் சிறிதளாவது தங்கத்தை திருப்ப முடியும் என்பவர்கள் செய்வது. எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நகையை திருப்புவதற்கான வாய்ப்புபோ, வசதியோ இல்லை என்பவர்கள் இந்த ஒரு பதிகத்தை தொடர்ந்து சொல்லும் பொழுது நிச்சயம் அதை மீட்பதற்கான வழி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

நகை திருப்ப சொல்ல வேண்டிய சுந்தரர் பாடிய தேவாரப் பதகம்

“மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.”

இதையும் படிக்கலாமே: பணப்பிரச்சினை, பணத்தடை தீர ஏகாதசி வழிபாடு

இந்த வழிமுறைகளுடன் இந்த ஒரு பதிகத்தையும் தொடர்ந்து சொல்லும் பொழுது நிச்சயம் அடகில் உள்ள நகை விரைவில் உங்களை வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் அதற்கான முழு முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் செய்தால் நிச்சயம் பலனை பெறலாம். அந்த வகையில் இந்த வழிமுறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -