- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணப்பிரச்சினை, பணத்தடை தீர ஏகாதசி வழிபாடு

பணப்பிரச்சினை, பணத்தடை தீர ஏகாதசி வழிபாடு

- Advertisement -

மனிதனாக பிறந்தவர்களுக்கு எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பணப்பிரச்சினை என்பது நிச்சயம் இருக்கும். இந்த
பணப் பிரச்சனை இல்லாத ஒருவரை கூட இன்றைய காலக்கட்டத்தில் நம்மால் பார்க்க முடியாது. இந்த பணத்தின் தேவையானது அவரவரின் நிலைமைக்கு ஏற்ப இருக்குமே அன்றி பண பிரச்சனை இல்லை என்கிற நிலைமை இருக்கவே இருக்காது. அப்பேர்ப்பட்ட பிரச்சனையை எளிதாக தீர்க்க ஆன்மீகத்தில் சில வழிமுறைகளும், வழிபாடுகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தடை நீங்க பெருமாள் வழிபாடு

ஒருவருடைய வாழ்க்கையில் இந்த பொருளாதாரப் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்தால் போதும் அவர்கள் வாழ்வில் பெரும் வசந்தம் வீசிக்கொண்டே இருக்கும். ஏனெனில் ஒவ்வொருவருடைய தேவையை நிறைவேற்றுவதில் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த பணத்தை நாம் சரியான முறையில் சம்பாதித்து தேவைக்கு ஏற்ப செலவு செய்யும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அப்படி சம்பாதிக்க தான் முடியவில்லை. அப்டியே சம்பாதித்தாலும் பணம் கையில் தங்குவதில்லை என்ற ஏக்கமும் விரத்தியும் கலந்த நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலை மாற வேண்டுமானால் நமக்கு பணவரவு அதிகரிப்பதுடன் பணத்தடை இல்லாமல் இருக்க வேண்டும். இந்தப் பண வரவிற்கும் பணத்தடைக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றும். பணவரவு என்பது நமக்கு வருமாகவோ அல்லது நாம் கொடுத்த இடத்தில் இருந்து நமக்கு வர வேண்டியதாகவோ இருக்கலாம். ஆனால் இந்த பண தடையானது நமக்கு வர வேண்டிய இடத்தில் இருந்தும் பணம் நம் கைக்கு வராது. இன்னும் சில நேரங்களில் நாம் செய்த வேலைக்கான சரியான ஊதியம் கூட நமக்கு கிடைக்காது. இப்படி பணம் தொடர்பான இந்த பிரச்சனைகள் தீர ஒரு எளிய வழிபாட்டு முறையும் உள்ளது. அதை வரும் வெள்ளிக்கிழமை (23.5.25) ஏகாதசி திதி அன்று செய்தால் மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

சரி இந்த பண பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி தாயாருக்கு உரியது. அன்றைய தினத்தில் ஏகாதிசியும் சேர்ந்து வந்திருப்பது ஒரு அற்புதமான நாள் என்றே சொல்லலாம். பெருமாளையும் தாயாரையும் ஒரே நாளில் வழிபடும் பொழுது நிச்சயம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி நல்ல மாற்றம் உருவாகும். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டின் பூஜை அறையில் உள்ள பெருமாள் படம் அல்லது சிலைக்கு சந்தனத்தால் ஒரு சிறிய பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு அதன் மேல் பச்சை கற்பூரத்தை கொஞ்சம் வைக்க வேண்டும். இந்த இரண்டும் மிக முக்கியமான ஒன்று இதை தவிர்க்காமல் செய்ய வேண்டும். அதன் பிறகு பெருமாளுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

மந்திரம்

“ஓம் நமோ நாராயணாய”

- Advertisement -

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் பொழுது உங்கள் மனதில் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் நினைத்துக் கொள்வதோடு உங்களுடைய பணத்தடை அனைத்தும் நீங்கி நல்லதொரு வளமான வாழ்க்கை வாழ்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்படி சந்தனம், பச்சைக் கற்பூரம் இரண்டையும் பெருமாளுக்கு இட்டு பெருமாளின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது பணம் தொடர்பான பிரச்சனை தீர்ந்து நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் வழிபாடு

இந்த வழிபாட்டை செய்யும் பொழுது இதுவரை இருந்த பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பண வரவிற்கான வாய்ப்புகள் தேடி வரும். இது மட்டும் இன்றி பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சிக்கல்களும் கூட தீர்வதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஏகாதேசி பெருமாள் வழிபாட்டு நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்தால் நல்ல பலனை பெறலாம்.

சற்று முன்