
என்னதான் எளிமை அழகு என்று சொன்னாலும், இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் விரும்புவது ஆடம்பரமான வாழ்க்கையை தான். ஆடம்பரம் அழகு என்றாலே, அந்த வார்த்தைகளுக்கு சொந்தமானவன் முருகன். பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு பின்னால் நீங்கள் செல்ல வேண்டாம். அந்த ஆடம்பரமும் பட்டமும் பதவியும் கௌரவமும் உங்கள் பின்னால் வரும்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை. இன்று முருகனை நினைத்து இந்த வழிபாட்டிற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டு வையுங்கள். அடுத்த 36 நாட்களில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறும். சரி, இன்றைய தினம் முருகனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும். அப்படியே ஒரு ராஜாவைப் போல உங்களை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள், ராணியைப் போல, இளவரசியை போல உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். நமக்கும் ஆடம்பர வாழ்க்கை கூடிய விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
இன்று வெள்ளிக்கிழமை. இன்று மாலை கொஞ்சம் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, அழகாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். என்ன வழிபாடு செய்தாலும், எந்த மந்திரத்தைச் சொன்னாலும், இந்த சரவணபவ மந்திரத்திற்கு ஈடு தரும் மந்திரம் வேறு எதுவும் கிடையாது.
அந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை சொல்லி நெற்றியில் நீரு பூசிக்கொள்ளவும். பிறகு பூஜை அறையில் ஒரே ஒரு நெய் விளக்கு முருகனை நினைத்து ஏற்ற வேண்டும். நெய் விளக்கு தான் ஏற்ற வேண்டும். அதற்குத்தான் மகாலட்சுமி கடாட்சத்தை ஈர்த்துக் கொடுக்கக்கூடும் சக்தி இருக்கிறது. பூஜை அறையில் அப்படியே ஒரு விரிப்பு போட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.
“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” என்ற இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும். எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. வேண்டுதலும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதே என்ன செய்வது.
இன்றைக்கு இந்த வழிபாட்டை துவங்கி விட்டீர்கள். இன்று தொடங்கி அடுத்த 36 நாட்கள் இந்த மந்திரத்தை தினம் தினம் 1008 முறை யார் உச்சரித்து வருகிறீர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்காலத்தில் பிரம்மாண்டமான வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. இது நிதர்சனமான உண்மை. வேண்டுதல் பெரிய அளவில் இருந்தால் வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் பெரிய அளவில் தான் இருக்கும். வேண்டுதல் சின்னதாக இருந்தால், 108 முறை சொன்னால் போதும்.
ஆடம்பர வாழ்க்கை தேவை பணம் காசு தேவை ஆனால் நம்முடைய உடம்பும் கஷ்டப்படக் கூடாது என்றால் எப்படி. முருகனை மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள் நம்பிக்கையோடு தங்கம் வெள்ளி வைடூரியம். ஆடை ஆபரண அணிகலன்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கும். ஏன் நீங்கள் நினைத்தால் அந்த ஆடம்பரமான வீட்டையே வாங்கிவிடலாம், நிறைய பணம் வந்தால் வீடு நிலம் வாங்கி குவிக்கலாம் தானே.
சரிங்க இவ்வளவு ஆடம்பரம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். ஒரு நிலையான வாழ்க்கை, நிரந்தரமான பொருளாதார நிலை வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை செய்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய முயற்சிகளை அனுதினமும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளில் தோல்வி வராமல் முருகப்பெருமான் பார்த்துக் கொள்வான். அதற்கான வழிபாடு முறைதான் இது.
இதையும் படிக்கலாமே: வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்
இன்று வெள்ளிக்கிழமை இந்த ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் என்ற மந்திரத்தை மட்டும் உங்கள் வாயிலிருந்து சொல்லிப் பாருங்கள். இந்த பதிவை படிக்கும் போது இந்த மந்திரத்தை ஒருமுறை படித்தாலே உங்களுக்குள் ஒரு பவர் வந்திருக்கும். நிச்சயம் முருக பக்தர்கள் இதை உணர்வீர்கள் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.