- Advertisement -
வீட்டு குறிப்புகள்

மண் அகல் விளக்கில் எண்ணெய் கசியாமல் இருக்க.

- Advertisement -

இந்த கார்த்திகை தீபத்தன்று மண் அகல் விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி வைத்து வழிபாட்டை மேற்கொள்வது மனதிற்கு நிம்மதியை தரும், சந்தோஷத்தை தரும் என்றாலும், இதற்கு பின்னால் இருக்கக்கூடிய கஷ்டம் பெண்களுக்கு அதிக வேலை பளுவை வைத்துவிடும். மண் அகல் விளக்கின் அடியில் எண்ணெய் கசிந்து வீடு முழுவதும் எண்ணெய் பிசுபிசுப்பு, குழந்தைகள் அதில் கால் வைத்து வழிக்கி விழுந்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நிறைய ஐடியா நமக்கு இருக்கு. எந்த ஐடியாவை ட்ரை பண்ணி பார்த்தாலும் என்னை கசியுதே என்ன செய்வது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க சூப்பரான ஒரு ஐடியா இருக்கு.

- Advertisement -

அகல் விளக்கில் எண்ணெய் கசியாமல் இருக்க

மண் அகல் விளக்குக்கு அடியில் நெயில் பாலிஷ், பெயிண்ட் எதை பூசி வைத்தாலும், அது விளக்கு ஏற்றிய பிறகு, சூடாகி உருகி அடியில் எண்ணெய் கசிய தான் செய்கிறது. இதுபோக ஆன்மீக ரீதியாக பார்த்தால் வெற்றிலை, வாழை இலை, அரச இலை, இதற்கு மேலே தீபம் ஏற்றி வைக்கலாம். ஆனால் எல்லோராலும் இதை வாங்க முடியாது.

காரணம் வீட்டில் 27 மண் நகல் விளக்குகள் கூட இந்த கார்த்திகை தீபத்திற்கு சில பேர் ஏற்றி வைப்பார்கள். அத்தனை வெற்றிலை, அத்தனை அரச இலைக்கு நாம் எங்கே செல்வது. தேவைப்பட்டால் வாழை இலைகளை வாங்கி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அகல் விளக்குக்கு அடியில் வைத்து ஏற்றலாம்.

- Advertisement -

அதுவும் உங்களால் முடியாது நீங்கள் இருக்கும் இடத்தில் வாழை இலையும் கிடைக்காது என்றால், மண் அகல் விளக்குகளில் அட்டை துண்டுகளை வைத்து தீபம் ஏற்றலாம். வீட்டில் ஏதாவது பொருட்கள் வாங்கும் போது, அட்டை பட்டியல் பேக் செய்து கொடுப்பார்கள். அதை பரண் மேலே தூக்கிப்போட்டு வைத்திருப்போம். அந்த அட்டைப்பெட்டியை எடுத்து சதுரமாக சின்ன சின்ன துண்டுகளாக கத்திரிக்கோலால் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இதன் மேலே மண் அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினால் எண்ணெய் கசிந்தாலும், அந்த அட்டை இழுத்துக் கொள்ளும். தரையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கவே இருக்காது. அந்த அட்டையை தாண்டி எண்ணெயானது கீழே வழியாது இதுதான் பெஸ்ட் ஐடியா. வாழை இலையில் எண்ணெய் கசிந்து இருந்தாலும், அந்த இலையை எடுக்கும் போது எண்ணெய் கீழே சொட்ட வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அட்டை துண்டுகளில் இருந்து எண்ணெய் கீழே ஒரு சுட்டுக் கூட விழாது.

- Advertisement -

அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றும் போது, ஒரு சொட்டு இரண்டு சொட்டு கீழே கொட்டி விட்டது என்றால், அதன் மேலே கொஞ்சம் கோதுமை மாவு தூவி ஒரு துணியை போட்டு துடைத்து எடுத்து விட்டால், தரையில் ஒரு துளி எண்ணெய் பிசுக்கும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த மல்லிகைப்பூ பஞ்சு திரி கடைகளில் விற்கிறது. மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதற்கு நடுவே இந்த மல்லிகை பூ பஞ்சு திரியை போட்டு பற்ற வைத்தால் தீபம் நடுவில் ஜோதி போல அழகாக எரியும். இந்த கார்த்திகை தீபத்திற்கு அந்த திரி வாங்கி நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். இப்படி நடுவில் தீபச்சுடர் எரியும்போது இந்த மண் அகல் விளக்கை அப்படியே ஒரு கொட்டாங்குச்சிகுள் வைத்து, நிலை வாசல் படியில் ஏற்றினால் இந்த அகல் விளக்குகள் காற்றில் அணியாமல் அழகாக எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பழைய மண் அகல் விளக்குகளை புதுசு போல மாற்ற டிப்ஸ்

மண் அகல் விளக்கின் வாய்ப்பகுதியில் திரி போட்டு தீபம் ஏற்றினால், கொட்டாங்குச்சிக்கு உள்ளே வைக்க முடியாது. அந்த நெருப்பு கொட்டாங்குச்சியில் பற்றி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -