- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பழைய மண் அகல் விளக்குகளை புதுசு போல மாற்ற டிப்ஸ்

பழைய மண் அகல் விளக்குகளை புதுசு போல மாற்ற டிப்ஸ்

- Advertisement -

இன்னும் ஒரு சில நாட்களில் கார்த்திகை தீபம் வரவிருக்கிறது. கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவிற்கு வருவது மண் அகல் விளக்குகள் தான். இந்த மண் அகல் விளக்குகளை வருஷா வருஷம் வாங்கி, நிறைய மண் அகல் விளக்குகள் வீட்டில் சேர்ந்திருக்கும். வீடு முழுக்க கார்த்திகை தீபத்தன்று இந்த விளக்குகளை அழகாக ஏற்றி வைக்க வேண்டும் என்றால், பழைய விளக்குகளை புதுசு போல மாற்ற வேண்டும். அந்த மண் அகல் விளக்குகளை சுத்தம் செய்ய ஒரு வழி தேவை. இதற்கு ஒரு சூப்பரான வீட்டு குறிப்பு உள்ளது. அதைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மண் அகல் விளக்குகளை சுத்தம் செய்வது எப்படி?

ஒரு சில வீடுகளில் காலம் காலமாக ஒரே மண் அகல் விளக்குகளை பயன்படுத்தி தீபம் ஏற்றுவார்கள். அந்த மண் அகல் விளக்குகள் தன்னுடைய சிவப்பு நிற தன்மையை இழந்து, கொஞ்சம் வெளுத்துப் போய் காணப்படும். அந்த அகல் விளக்குகளை கூட சுலபமாக புதுவிளக்குகள் போல, செம்மண் கலரில் மாற்ற முடியும். அது எப்படி தெரியுமா? கொஞ்சமாக கடைகளில் செம்மண் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கோலமாவு கலக்காத நைசாக இருக்கும் செம்மண் தேவை.

- Advertisement -

‘காவி’ என்று கூட இதை சொல்லுவார்கள். நாட்டு மருந்து கடை, மளிகை கடைகளில் கேட்டால் பத்து ரூபாய்க்கு கூட நிறைய காவி கிடைக்கும். அதை வாங்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி திக்கான கலவையாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு பிரஷ்ஷில் அல்லது தேங்காய் நாரில் தொட்டு வர்ணம் அடிப்பது போல, பழைய மண் அகல் விளக்குகளுக்கு உள்பக்கமும் மேல் பக்கமும் கலர் அடித்து இதை இரண்டு மணி நேரம் காய வைத்தால் சூப்பரான மண் அகல் விளக்குகள் தயார்.

இதுபோல செய்யும் பட்சத்தில் போன வருடம் தீபம் ஏற்றும் போது இருந்த கருப்பு நிறங்கள் கூட, இந்த வர்ணம் தீட்டுவதால் காணாமல் மறைந்து போய்விடும். பழைய மண்அகல் விளக்குகள் எல்லாம் புதுசு போல அப்படியே ஜொலிக்கும். சரி எல்லா மண் அகல் விளக்குகளுக்கும் இப்படி வர்ணம் தீட்டு முடியாது.

- Advertisement -

ரொம்பவும் பழைதான மண் அகல் விளக்குகளை மட்டும், வர்ணம் தீட்டி விட்டோம். போன வருடம் வாங்கிய விளக்குகளை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம். அது எப்படி தெரியுமா? ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஆப்ப சோடா, ஷாம்பு இரண்டு பொருட்களையும் தேவையான அளவு போட்டு கலந்து, அதில் பழைய மண் அகல்விளக்குகளை எல்லாம் போட்டு ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து, அதையெல்லாம் எடுத்து மீண்டும் சாதாரண தண்ணீரில் அலசி கழுவி, வெயிலில் காய வைத்தால் சூப்பரான விளக்குகள் தயாராகிவிடும். இப்போது இதுபோல தயார் செய்த விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றலாம்.

- Advertisement -

சில மண் அகல் விளக்குகளில் கீழே அடிப்பக்கத்தில் எண்ணொய் கசியும். அதற்கு என்ன செய்வது. அடியில் வாழை இலை வைக்கலாம், அல்லது வாழைப்பூ மேலே அந்த மடல்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் அல்லவா. அதை வைத்து அதன் நடுவே மண் அகல் விளக்கை வைத்து ஏற்றலாம். வாழைப்பூ மடல்கள் கொஞ்சம் வளைந்தது போல இருக்கும்.

அந்த வளைந்த பக்கத்தை காற்று வீசும் திசைக்கு திருப்பி வைத்து விட வேண்டும். எந்த பக்கம் காற்று வீசுகிறதோ, அந்தப் பக்கமாக இந்த வாழைப்பூ மடல்களை மறைவாக இருக்கும். இப்படி செய்யும் பட்சத்தில் காற்று அடிக்கும் போது கூட நம் வீட்டு விளக்குகள் அணையாமல் எரியும். அந்த வாழைப்பூ மடல்கள் காற்றை தடுத்து, தீபத்தை நல்லபடியாக எரிய வைக்கும். இதுபோக இன்னொரு ஐடியாவும் இருக்கிறது.

வெற்றிலை பாக்குக்கு சுண்ணாம்பு போடுவாங்க தெரியுமா? சுண்ணாம்பு மலிவான விலையில் கிடைக்கும். சுண்ணாம்பு வாங்கி தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பிரஷ்ஷிலோ அல்லது தேங்காய் நாரிலோ தொட்டு மண் அகல் விளக்குகளுக்கு அடிப்பக்கத்தில் வர்ணம் போல பூசி அப்படியே அதை கவிழ்த்தபடி வைத்து காய வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பித்தளை பாத்திரங்கள் பளபளக்காக டிப்ஸ்

இப்படி செய்தாலும் மண் அகல் விளக்குகள் கீழே எண்ணெய் வடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன இந்த சின்ன சின்ன குறிப்புகள் இந்த கார்த்திகை தீபத்திற்கு இல்லத்தரசிகளுக்கு நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த வீட்டு குறிப்பு பதிவினை நிறைவு செய்து கொள்கின்றோம்.

சற்று முன்