- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

9000 ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரத்தை கண்டுபிடித்த அகத்தியர் – ஆதாரத்துடன் கூடிய உண்மை

நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல. நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இரும்பை தங்கமாக்குவது, கிரகங்கள் மொத்தம் 9 என அறிந்தது இப்படி பல சான்றுகளை இதற்க்கு கூறலாம். அந்த வகையில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரத்தை கண்டறிந்தார் அகத்தியர் சித்தர். அதற்கான ஆதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்த திரு கிருஷ்ணாஜி (Rao Saheb Krishnaji Vajhe) என்பவர் தனது துறை சார்ந்த ஆய்வை மேற்கொள்ள விரும்பினார். இதற்காக அவர் ஜோஷி ( Damodar Tryambak Joshi) என்பவற்றின் உதவியை நாடினார். அவரிடம் பழமையான ஆவணம் ஒன்றை பெற்றுக்கொண்டு அதில் உள்ள கருத்தை ஆய்வு செய்தார். அந்த ஆவணம் தான் அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

- Advertisement -

அதில் இருந்த வரிகள் இதோ:
“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

இதற்கான விளக்கத்தை இறுதியில் பார்ப்போம்.

- Advertisement -

ஆவணத்தில் உள்ளவை சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்பதால் சமஸ்கிருத வல்லுனரான புத்தே (Dr.M.C.Sahastrabuddhe ) அவர்களை அணுகினார் கிருஷ்ணாஜி. அதை படித்த புத்தேவிற்கு ஆச்சாரம். மிகப்பெரிய அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதில் இருப்பதை அவர் அறிந்தார். உடனே அவர் அதை பொறியியல் வல்லுனர் ஹோல் என்பவரிடம் கொடுத்து மேலும் ஆராய சொன்னார்.

கிருஷ்ணாஜியும் ஹோலும் சேர்ந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். சம்ஸ்கிருத சொற்களில் இருந்தபடியே அவர்கள் ஒரு மின்கலத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அவர்கள் “சிகிக்ரிவம்” என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் திணறினர். அப்போது ஒரு சம்ஸ்கிருத அகராதியில் அதற்கான அர்த்தம் “மயிலின் கழுத்து” என்றிருந்தது.

- Advertisement -

உடனே அவர்கள் மயில்கள் சரணாலயத்திற்கு சென்று அங்கு இருந்த தலைமை பொறுப்பாளரிடம் இது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் அந்த சொல்லிற்கான அர்த்தம் மயில் கழுத்து அல்ல, மயில் கழுத்தை போன்ற நிறமுடைய பொருள் என்றார். ஆய்வாளர்கள் இருவரும் அது குறித்து சிந்திக்கையில் காப்பர் சல்ஃபேட் தான் மயிலின் கழுத்தை ஒத்த நிறம் கொண்டதாக இருக்கும் என்று கண்டறிந்தனர்.

மின் கலத்தை வடிவமைக்கு பணியை மீண்டு அவர்கள் தொடங்கினர். சில மணி நேரங்களில் மின்கலம் தயாரானது. ஒரு மல்டி மீட்டரை கொண்டு அதை ஆராய்கையில் 1.38 open Circuit வோல்ட்டேஜ் மற்றும் 23 milliampere Short Circuit கரன்ட்டும் அதில் இருந்து கிடைக்கப்பெற்றது. அவர்கள் வியந்து போனார்கள். அந்த காலத்தில் இதற்கு அகத்திய மாமுனி இட்ட பெயர் மித்ரவருண சக்தி. இதைத்தான் வெள்ளைக்காரன் தான் கண்டுபிடித்ததாக கூறி அதற்க்கு கரண்ட் என்று பெயர் வைத்துள்ளான். நாமும் அதற்கு மின்சாரம் என்று தமிழில் பெயர் வைத்து அழைக்கிறோம்.

இதையும் படிக்கலாமே:
சித்தர் சமாதியில் மருந்தாக மாறும் அன்னம் – சித்தர் நிகழ்த்தும் அற்புதம்

சம்ஸ்கிருத பாடலுக்கான பொருள்:

ஒரு மண் குடுவைக்குள் தாமிர தகடை செலுத்தி பின் சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். அதன் பிறகு ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு அதை பூச வேண்டும். அதன் பிறகு இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்.

- Advertisement -