- Advertisement -

அக்னி நட்சத்திரத்தில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்! ராசிக்குரிய தானம் செய்தால் நீங்களும் செல்வந்தராகலாம்.

மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறும் பொழுது அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிறது. மே 4 முதல் மே 29 வரை நடக்கக்கூடிய அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன? இந்த தானங்களை எந்த ராசிக்காரர்கள் செய்வது உத்தமம்? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திரத்தில் கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது உத்தமம். காரண காரியம் இல்லாமல் வெளியில் செல்லாதீர்கள். உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை மக்களுக்கு குடை தானம் செய்யுங்கள். அக்னியில் குடை தானம் செய்தால் அவர்களுக்கு நிழல் தந்த புண்ணியத்தால் உங்களுடைய வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திரத்தில் குளிர்ந்த ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கக்கூடிய வெங்காயம், பூண்டு அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு நீங்கள் நீர்மோர் தானம் செய்வது உத்தமம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது. சுப காரியம் பேச்சுவார்த்தைகளை தாராளமாக நடத்தி கொள்ளலாம். ஆனால் சுபகாரியம் செய்பவர்கள் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு செய்வது நல்லது. உங்கள் ராசிக்கு நீங்கள் கண்ணாடி தானம் செய்து வரலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்லுங்கள். உணவு கட்டுப்பாடு கட்டாயம் மேற்கொள்வது உத்தமம். உங்கள் ராசிக்கு நீங்கள் கேழ்வரகு கூழ் தானம் செய்யலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் அடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது உத்தமம். தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு நீங்கள் பாய் போன்ற விஷயங்களை தானம் செய்வது நற்பலன்களை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திர காலங்களில் புதிய நபர்களிடம் பழகுவதை தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் ராசிக்கு நீங்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திரத்தில் மற்றவர்களுடைய வீட்டில் சென்று தங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் அடிக்கடி வெயிலில் சென்று விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ராசிக்கு நீங்கள் குடை தானம் செய்து வர வாழ்வு செழிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திரத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து வீட்டில் இருப்பது நல்லது. அடிக்கடி நீர் மோர் அருந்துவது, மிளகு சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்கள் ராசிக்கு நீங்கள் இளநீர் தானம் செய்ய உன்னதமான பலன்களை பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திரத்தில் அடிக்கடி நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். எந்த அளவிற்கு தண்ணீர் அருந்துகிறீர்களோ அந்த அளவிற்கு ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லையென்றால் நீர்க்கடுப்பு, உஷ்ணம் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உண்டு. உங்கள் ராசியை பொறுத்தவரை நீங்கள் கோவில்களில் எலுமிச்சை சாதம் தானம் செய்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் கூடுமானவரை காலை, மாலை வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லது. உங்கள் ராசிக்கு சூரியனுடைய அருள் கிடைத்தால் நீங்களும் நல்ல பலன்களை அடையலாம். உங்கள் ராசிக்கு செருப்பு தானம் செய்து வர ஏற்றம் காணலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் முருகனை வழிபட முத்தான வாழ்க்கை அமையும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்துவர அற்புத பலன்களை பெறலாம். உங்களால் முடிந்தால் ஒருவருக்காவது உணவு பொட்டலங்களை வாங்கிக் கொடுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் தகிக்கும் அக்னி நட்சத்திரத்தில் நுங்கு, இளநீர், மோர் ஆகிய உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் சீராக இருக்க உதவும். மரம் செடி நடுவது தவிர்க்க வேண்டும். உங்கள் ராசிக்கு நீங்கள் நீர் மோர், தயிர் சாதம் போன்றவற்றை தானம் கொடுப்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -
Published by