- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

திடீர் பணத் தேவை பூர்த்தி செய்ய பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பண தேவை என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானதாக உள்ளது. பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது மட்டுமல்ல பணம் இல்லாமல் இன்றைய காலக்கட்டத்தில் ஒருவருக்கு மரியாதை என்பது கூட கிடையாது. இது கொஞ்சம் கசப்பான உண்மை என்றாலும் நிச்சயம் அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இந்த நிலை இப்போது மட்டுமல்ல அந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆகையால் தான் பெரியவர்கள் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று பணத்திற்குள்ள முக்கியத்துவத்தை எளிமையாக இப்படி சொல்லி வைத்திருக்கிறார்கள். இது போல இன்னும் ஏராளமான பழமொழிகள் உண்டு. சரி இதிலிருந்து பணம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து விட்டது. அப்படியானால் இந்த பணம் நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த கேள்வி ஒன்று உள்ளது அல்லவா. அதற்கான பதில் தான் இந்த பதிவு.

- Advertisement -

பணம் வர செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்றாலும் இதற்கான முன்னேற்பாடாக ஒரு விஷயத்தை நாம் வெள்ளிக்கிழமை இரவே செய்து விட வேண்டும். அது என்னவென்று இப்போது பார்க்கலாம். இதற்கு கருப்பு உளுந்து தேவை அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை இரவில் ஒரு சிறிய கிண்ணத்தில் கைப்பிடி உளுந்தை சேர்த்து அந்த உளுந்து மூழ்கும் வரை தயிர் சேர்த்து ஊற விடுங்கள். இதற்கு எந்த தயிர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மறுநாள் சனிக்கிழமை காலைவரை இது அப்படியே ஊறட்டும். சனிக்கிழமை அன்று தயிரில் ஊறிய இந்த உளுந்தில் இனிப்பிற்கு நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை வெல்லம் என ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை கொண்டு சென்று அரச மரத்தின் அடியில் தூவி விட வேண்டும். இதை சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள்ளாக செய்துவிட வேண்டும். அரச மரத்தடியில் நீங்கள் இந்த கலவையை வைத்த பிறகு திரும்பி பார்க்காமல் நேராக வீட்டுக்கு வந்து விட வேண்டும் இடையில் வேறு எங்கும் செல்லக் கூடாது யாருடனும் பேசவும் கூடாது.

இது போல எட்டு வாரங்கள் செய்து வரும் பொழுது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என்றால் நீங்கள் வெறுமனே இருந்தால் இது நடக்காது. பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்கும் போது இதுவரை இல்லாத அளவிற்கு அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி உங்களுக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் பணம் உங்களை வந்து சேர்வதற்கான ஈர்ப்பு இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த பரிகாரத்துடன் சேர்த்து இவற்றிற்கெல்லாம் தேவையான உங்கள் முயற்சியும் தான். இந்த பரிகார முறை மிகவும் எளிமையானது. ஆனால் பலன் நல்ல முறையில் இருக்கும் என்றுசொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அற்புத பலனை தரும் ஏகாதசி திதி

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகார முறையை கடைப்பிடித்து பலன் அடையலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -