
பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த திதியெனில் அது ஏகாதசி திதி தான். ஏகாதசி திதியெனில் வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருந்து கண் விழித்து வணங்குவது மட்டும் அன்று. மாதத்தில் வரும் ஏகாதிசியிலும் எளிமையான முறையில் வழிபட்டாலும் பெருமாளின் பரிபூரண பெறலாம். அப்படி பெருமாளின் பரிபூரண அருளை பெறக் கூடிய ஏகாதசி சூட்சம பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த ஏகாதசியானது நாளைய தினம் சனிக்கிழமை வந்திருப்பது பல விசேஷங்களை நமக்கு தருவதாக அமைந்துள்ளது. சனிக்கிழமை என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாள் தான். ஏகாதசியும் பெருமாளுக்கு உகந்த நாள். இந்த இரண்டும் ஒரு சேர வந்திருப்பது மிகப்பெரிய அற்புத பலனை நமக்கு தருவதாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.
நாளைய தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். பெருமாளுக்கு உகந்த துளசிக் கொண்டு மாலை சாற்றுங்கள். நெய்வேத்தியமாக பெருமாளுக்கு பானகம் செய்து வைத்தாலும் கூட போதும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை சொல்லுங்கள் இதைத் தவிர வேறு பெருமாளின் மந்திரங்கள் தெரிந்தாலும் சொல்லலாம்.
இவையெல்லாம் காலை வேளையில் செய்த பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பெருமாள் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்று கோவிலில் தரும் துளசி தீர்த்தத்தை வீட்டிற்கு வாங்கி வாருங்கள். இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் நாளைய தினம் இந்த சூட்சம பரிகாரத்தை செய்வது நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்கும்.
அருகில் ஆலயம் இல்லை எங்களால் செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலே கூட எளிமையான இன்னொரு சூட்சம பரிகாரத்தை செய்யலாம். அதற்கு ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் துளசியை போட்டு பூஜை அறையில் பெருமாள் படம் அல்லது லட்சுமி தாயார் படம் அருகில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் பூஜை செய்யும் போது வைத்து விடலாம். பூஜை முடித்த பிறகு இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.
ஆலயம் செல்ல முடியாதவர்கள் மட்டும் இதை செய்யுங்கள். இரண்டு பரிகாரத்தையும் கூட ஒன்றாக செய்யலாம் அது மேலும் அற்புத பலன்களை உங்களுக்கு தருவதாக அமையும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபடுவதே மிகவும் சிறப்பானது அந்த திதியில் அவருக்கு உகந்த இந்த துளசிக் கொண்டு நாம் இந்த பரிகாரத்தை செய்வது வீட்டில் பண வரவை அதிகரிக்க கூடிய வாய்ப்பை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஆண்களை பாதுகாக்கும் தீப வழிபாடு
பெருமாளின் பரிபூரண அனுகிரகத்தை பெற்று நல்ல செல்வ வளத்துடன் வாழ வைக்கக் கூடிய இந்த சூட்சும பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.