- Advertisement -

ஐப்பசி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

ஒவ்வொரு நாளும் எந்த அளவிற்கு சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்க ஆரம்பிக்கும். இந்த ஐப்பசி மாதம் முழுவதும் நமக்கு நன்மைகள் ஏற்பட வேண்டும், மங்களங்கள் பெருக வேண்டும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்றால் ஐப்பசி முதல் நாள் நாம் சில வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் ஐப்பசி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஐப்பசி முதல் நாள் வழிபாடு

புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு ஐப்பசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியங்களும் நமக்கு வெற்றியடைய வேண்டும், நன்மைகள் உண்டாக வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவோம். இதுவரை நடந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து இனிமேலாவது நன்மைகள் உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை ஐப்பசி மாதம் முதல் நாள் அதாவது அக்டோபர் மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். அதுவும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் மூன்று தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த தீபங்கள் நல்லெண்ணெய் தீபமாகவும் இருக்கலாம் நெய் தீபமாகவும் இருக்கலாம். இந்த மூன்று தீபங்களும் கிழக்கு, வடக்கு, மேற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து “ஓம் சக்தி” என்று 21 முறை உச்சரிக்க வேண்டும். இது சாதாரணமாக நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் மங்களங்கள் பெருக வேண்டும், மங்கள நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் காலை 6 மணியிலிருந்து 10:15 குள் அல்லது மாலை 5:30 மணியில் இருந்து 11:30 மணிக்குள் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் மஞ்சள் தூளை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த அகல்விக்கில் ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்திருக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்திற்கு முன்பாக மூன்று வகையான நெய்வேத்தியங்களை வைக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஒரு இனிப்பு கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். இப்பொழுது மலர்களை வைத்து அந்த தீபத்திற்கு முன்பாக 108 முறை இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு நடைபெற வேண்டிய மங்கள நிகழ்ச்சிகள் அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

ஓம் மங்கள ரூபிணியே போற்றி ஓம்

இதையும் படிக்கலாமே:புரட்டாசி பௌர்ணமி அம்பிகை வழிபாடு

இந்த எளிமையான வழிபாட்டு முறையை ஐப்பசி மாதம் முதல் நாள் செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாவதோடு தடைபட்டிருக்கும் மங்களங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -