- Advertisement -

அம்மனின் அருள் கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபாடு செய்ய தான் செய்வோம். அப்படி செய்வதன் மூலம் அவர்களின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும், அதே சமயம் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்று நினைத்துதான் அந்த வழிபாட்டை மேற்கொள்வோம். அந்த வகையில் அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு பல வழிப்பாட்டு முறைகள் இருந்தாலும் வழிபாட்டிற்கே உரிய மாதமான கார்த்திகை மாதத்தில் அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அம்மனின் அருள் கிடைக்க வழிபாடு

கார்த்திகை மாதம் என்றாலே அது தீபத்திற்கு பெயர் போன மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் வழிபாடுகளுக்கு உகந்த மாதமாகவும் கார்த்திகை மாதம் திகழ்கிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வகித்த நாளாகவே திகழ்கிறது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாட்டிற்கு உரிய கிழமையாக திகழ்கிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று பலரும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வீட்டில் பூஜை செய்யும் பழக்கம் வைத்திருப்பார்கள் எந்த நேரத்தில் நாம் பூஜை செய்தாலும் எந்த நெய்வேத்தியத்தை வைத்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அம்மனை நினைத்து நாம் ஏற்றக்கூடிய தீபமானது அம்மனின் அருளை நமக்கு பரிபூரணமாக கிடைக்கச் செய்யும்.

மேலும் அந்த தீபத்தை ஏற்றி வைத்து நாம் வேண்டக் கூடிய எந்த வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நமக்கு நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு உரிய நேரமாக கருதுவது காலை 10 மணியிலிருந்து 11 மணி மற்றும் மாலை 5 மணியிலிருந்து 6 மணி. இந்த நேரத்தில் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சுத்தம் செய்த ஒரு அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை எந்த அம்மனை நீங்கள் வழிபாடு செய்வீர்களோ அந்த அம்மனுக்கு முன்பாக ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அந்த தீபத்தில் அந்த அம்மனையே நாம் பார்ப்பது போல் மனதார கண்டு மகிழ்ந்து நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். ஒரு மணி நேரம் முழுவதும் இந்த தீபம் எரிவது போல் பார்த்துக் கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழிகளும் வாய்ப்புகளும் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:சமையலறை எப்படி இருந்தால் கடன் சேராது?

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு எந்த அம்மனை உங்களுக்கு பிடிக்குமோ அந்த அம்மனின் பெயரை கூறி ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அந்த அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -