- Advertisement -
சமையல் குறிப்புகள்

இப்படி அரைத்து விட்ட தக்காளி குழம்பை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு தட்டு நிறைய சாதம் கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

- Advertisement -

காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் சற்று எளிதான உணவை சமைத்து விடலாம். ஆனால் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நிச்சயம் குழம்பு, பொரியல் என்று இருக்க வேண்டும். அதிலும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான குழம்பு இருந்தால் மட்டுமே அனைவரும் நன்றாக சாப்பிடுவார்கள். அவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் அடிக்கடி சாம்பார், காரக்குழம்பு, குருமா இவை மட்டும் தான் செய்யப்படும். இப்படி ஒரே விதமான குழம்புகளை தவிர்த்து, அதன் சுவையை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும். அப்படி எப்போதும் செய்யும் கார குழம்பை சற்று மாற்றி இப்படி அரைத்துவிட்ட குழம்பு வைத்தால் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த தக்காளி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 5, பூண்டு – பத்து பல், எண்ணெய் – 7 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சைப்பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை கரைத்து, வடிகட்டி புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 வெங்காயம், 3 தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம், கால் ஸ்பூன் மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு 5 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள 3 தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மீதமுள்ள 2 தக்காளியை பொடியாக அரிந்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன் 5 பல் பூண்டு சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு சில்லு தேங்காயை துருவி சேர்த்து, இவை மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன், 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இதன் மீது ஒரு தட்டு போட்டு மூடி மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -