- Advertisement -

ஆரோக்கியம் பெற இன்று சிவன் வழிபாடு

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்று சம்பாதிக்கும் பாதி பணத்தை, இல்லை முழு படத்தை கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டி கொடுக்கின்றோம். இந்த நிலைமை மாற வேண்டும். ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இன்று சனி மஹா பிரதோஷம்.

சிவபெருமானை பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லி, இந்த மாலையை போட்டு  வணங்கினால் ஆரோக்கியம் கிடைக்கும். நோய் நொடி பிரச்சனை தீரும். சிவபெருமான் கழுத்தில் நீங்கள் போட வேண்டிய அந்த மாலை என்ன, சொல்ல வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நோய்நாடி தீர சிவபெருமான் வழிபாடு

108 வில்வ இலைகளை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற நூல் தேவை. ஒவ்வொரு வில்வ இலைகளாக எடுத்த அந்த நூலில் கட்ட வேண்டும். 108 இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து கட்டும் போதும் ஒவ்வொரு முறை ‘அங் உங் வங் சிவாய நம’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி, 108 முறை வில்வ இலைகளை உங்கள் கையாலே மாலையாக கட்டி சனி மகா பிரதோஷ நாளான இன்று சிவபெருமானுக்கு சாத்தலாம். அல்லது நந்தி தேவருக்கு சாத்தலாம்.

இரண்டுமே ஒன்றுதான். இந்த மாலையை இன்று சிவனுக்கு கட்டி போட்டால் நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நோய் நொடி பிரச்சனைகள் தீரும். மருத்துவ செலவு குறையும் என்பது நம்பிக்கை. மற்ற பிரதோஷ நாளிலும் இந்த மாலை கட்டிப் போடலாம் தவறு கிடையாது. இன்று சனி மகா பிரதோஷம். இந்த மாலையை கட்டி போடுவதன் மூலம் பெரிய அளவில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

இன்று மாலை கோவிலுக்கு செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பச்சரிசி மாவை வாங்கி கொடுங்கள். பச்சரிசி மாவில் சிவபெருமான அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை விலகும் என்பது நம்பிக்கை. இதோடு சேர்த்து 1 கைப்பிடி பச்சரிசி மாவில், 1 கைப்பிடி சர்க்கரை சேர்த்து கலந்து சிவபெருமான் கோவிலில் இருக்கும் மரத்தடியில் தூவி விடுங்கள். கோடி புண்ணியத்தை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலம் பெறுங்கள்.

- Advertisement -
Published by