- Advertisement -

நம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர்கள் தான் அஷ்டலட்சுமிகள். பொதுவாக செல்வத்தை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் மகாலட்சுமி தாயார் என்றால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஒவ்வொரு வகையான செல்வத்தையும் தரக்கூடியவர்களாக திகழ்ந்தவர்கள் தான் அஷ்டலஷ்மிகள் என்று கூறப்படுகிறது. ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, வீரலட்சுமி என்று எட்டு லக்ஷ்மிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடியவர்களாக திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட அஷ்டலட்சுமிகளின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அதற்கு சந்தானலட்சுமியின் அருள் வேண்டும். அந்த குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் விஜயலட்சுமியின் அருள் வேண்டும். தைரியமான வீரனாக மாற வேண்டும் என்றால் வீரலட்சுமியின் அருள் வேண்டும். உண்ணும் உணவிற்கு எந்தவித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தானியலட்சுமியின் அருள் வேண்டும். செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றால் தனலட்சுமியின் அருள் வேண்டும். இப்படி நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு அஷ்டலட்சுமிகளின் அருள் வேண்டும். இந்த அஷ்டலஷ்மிகளை நாம் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக லட்சுமி வழிபாட்டிற்குரிய தினமாக திகழ்வது வெள்ளிக்கிழமை தான். வெள்ளிக்கிழமை அன்று அஷ்டலட்சுமிகளை நாம் இந்த முறையில் வழிபட்டோம் என்றால் நம் வீட்டில் எந்த வித குறையும் இருக்காது. இயன்றவர்கள் இந்த வழிபாட்டை தினமும் மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருட்கள் அகல் விளக்கு, நெய், குங்குமம், மலர்கள். அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் மகாலட்சுமியின் படம் இருக்கும். அந்த மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக பச்சரிசி மாவால் தாமரைப்பூ கோலத்தை போட்டுக்கொள்ள வேண்டும்.

தாமரை பூவில் தான் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார் என்பதால் தாமரை பூக்கோலத்தை போட வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்பொழுது முதலில் விநாயகருக்கு ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வரைந்திருக்கும் தாமரை பூக்கோலத்தின் மீது எட்டு அகல் விளக்குகளை வைத்து அந்த அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு அஷ்ட லட்சுமிகளின் நாமங்களை உச்சரித்தவாறு ஒவ்வொரு அகல் விளக்கிற்கும் குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இயன்றவர்கள் லட்சுமி அஷ்டோத்திரத்தை கூறியும் அர்ச்சனை செய்யலாம். பிறகு அந்த அகல் விளக்குகளுக்கு உதிரி பூக்களை சமர்ப்பித்து விட்டு எட்டு அகல் விளக்கு தீபத்தையும் எட்டு லட்சுமிகளாக பாவித்து அதாவது அஷ்ட தீபங்களை அஷ்டலட்சுமி ஆக பாவித்து வழிபட வேண்டும்.

இவ்வாறு நாம் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை மகாலட்சுமி தாயாருக்கு வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த முறையில் தினமும் அல்லது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்றோ நாம் தீபம் ஏற்றி அஷ்டலட்சுமிகளை வழிபடும் பொழுது அவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பெண்கள் அழகாக இருக்க ஆன்மீக குறிப்பு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள்.

- Advertisement -