- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெருமளவு பேசப்படுவது வாராகி அன்னையின் வழிபாடு. துன்பம் என்று கண்ணீர் சிந்த வேண்டியவுடன் உடனே வந்து கண்ணீரை துடைக்கும் அன்னையாக வாராகி விளங்குகிறார். ஆகையால் தான் இன்று பெரும்பாலானோர் வாராகி வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சக்தி வாய்ந்த இந்த அன்னையை நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து இன்னல்கள் நீங்கவும் வழிபாடு செய்யலாம்.

எதிரிகள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழவும் அதே நேரத்தில் நல்ல தன வர உடன் கூடிய ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், இந்த அன்னையை எளிமையாக வழிபட முறை உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாராகி அன்னை வழிபாடு

இந்த வாராகி அன்னை என்பவர் சப்த கன்னிகளில் ஐந்தாவது திகழ்பவர். ஆகையால் இந்த அன்னையை வழிபடுவதற்கு பஞ்சமி நாள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வெள்ளி, செவ்வாய் போன்ற தினங்களிலும் அன்னையை வணங்குவது சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

எதிரிகளின் தொல்லை நீங்க வழிபடக் கூடிய இந்த வழிபாட்டை நீங்கள் வெள்ளி அல்லது செவ்வாய் இரண்டு தினங்களில் ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கிழமையை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதே கிழமையில் தான் வாரந்தோறும் வழிபாடு செய்ய வேண்டும். அதே போல முதல் முறை இந்த வழிபாட்டை காலையில் மேற்கொண்டால் அதே போல் காலை நேரத்தில் தான் வழிபட வேண்டும்.

- Advertisement -

வீட்டில் வாராகி அன்னையின் திருவுருவப்படம் இருந்தால் அதை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அன்னைக்கு உகந்த செவ்வரளி பூக்களால் மாலை சூட்டுங்கள். அன்னையின் திருவுருவப் படம் இல்லாதவர்கள் ஒரு அகல் விளக்கை அன்னையாக பாவித்து விளக்கை சுற்றி பூக்களை வைத்து தீபம் ஏற்றலாம். இந்த அன்னைக்கு பஞ்சமுக தீபம் ஏற்றுவது சிறந்தது முடிந்தால் அதை ஏற்றுங்கள்.

இந்த தொல்லை நீங்க நாம் வைத்து வணங்க வேண்டிய பொருள் வெள்ளை மொச்சை தான். இந்த வெள்ளை மொச்சையை ஊற வைத்து அதன் பிறகு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த மொச்சை பயிரில் இனிப்பிற்காக தேன் கலந்து அதை அன்னைக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அன்னையினை வழிபடும் போது அவருடைய அஷ்டோத்திரங்கள், மந்திரங்கள் என எது தெரிந்தாலும் அதை சொல்லலாம்.

- Advertisement -

அதே போல் இந்த அன்னைக்கு வாசம் மிகுந்த இடத்தில் இருப்பது மிகவும் பிடிக்கும் ஆகையால் வழிபடும் நேரத்தில் சாம்பிராணி நல்ல மணம் மிக்க ஊதுபக்திகளை ஏற்றி வையுங்கள். இந்த முறையில் அன்னையை வழிபாடு செய்த பிறகு இந்த பிரசாதத்தை நீங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படி அன்னையை வணங்கி வரும் பொழுது உங்களுடைய எதிரி தொல்லைகள் முற்றிலும் ஆக நீங்கி நிம்மதியான வாழ்க்கை அன்னை அருள்வார்.

இதையும் படிக்கலாமே: அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

அது மட்டும் இன்றி நல்ல தன வரவையும் ஏற்படுத்திக் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. உங்கள் வழிபாட்டில் அன்னை மனம் மகிழந்தாலே போதும் நீங்கள் வேண்டுவன எல்லாம் உங்களை வந்தடையும். இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் அன்னையை வழிபட்டு அவரின் முழு அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -