- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அத்தி வரதர் கையில் உள்ள அந்த மூன்றெழுத்துக்களின் அர்த்தம் என்ன தெரியுமா?

மிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாழ்வில் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாக இந்த அத்திவரதர் தரிசன வைபவம் இருப்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் அத்திவரதர் தரிசனம் காண காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள கோயிலுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்

ஒவ்வொரு முறை அத்திவரதர் தரிசன வைபவத்தின்போது சில நாட்கள் சயன கோலத்திலும் சில நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தருவது நடைமுறையாக இருக்கிறது அந்த வகையில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சயனக்கோலம் எனப்படும் படுத்திருந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தந்த அத்திவரதர் பெருமாள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் நின்றகோலத்தில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்

- Advertisement -

பொதுவாக மகாவிஷ்ணு வடிவில் இருக்கும் திருமால் வலது கரத்தை அபய ஹஸ்தத்திலும் மற்ற கரங்கள் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தாங்கியபடியும் பக்தர்களுக்குக் காட்சி தருவது வழக்கம். அது போன்றே அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கும் காஞ்சிபுரம் அத்திவரதரின் கையில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தங்கக் கவசத்தில் 16 வைரக் கற்கள், 188 ரூபி எனப்படும் மாணிக்க கற்கள், 3 மரகதக் கற்கள், 107 அமெரிக்கன் டைமண்ட் வகை வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுவாக பெருமாள் கோயில்களில் பக்தர்கள் பெருமாள், தாயாருக்கு தங்க கவசம், ஆபரணங்கள் போன்றவற்றை காணிக்கையாக தருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2012-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8 -ம் தேதி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரால் இந்தத் தங்கக் கவசம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கக் கவசம் மட்டுமன்றி தங்கச் சங்கு, சக்கரம் ஆகியவற்றையும் அவர் காணிக்கையாக கோயிலுக்கு வழங்கியுள்ளார். வரதராஜ பெருமாள் மூலவருக்குச் அணிவிக்கப்பட்ட அந்த தங்கக் கை கவசம் மற்றும் ஆபரணங்கள் தான் தான் தற்போது அத்தி வரதருக்கும் சாத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

அப்படி அத்தி வரதருக்கு அணிவிக்கப்பட்டுள்ள அந்தத் தங்கக் கவசத்தில் “மாசுச” என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் என்ன என்பது தான் பலரின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது. இதை பற்றி அக்கோயிலின் அர்ச்சகர் ஒருவரை கேட்ட போது “மாசுச” என்பது வடமொழிச் சொல் என்றும்.”மாசுச” என்றால் ‘கவலைப்படாதே’ என்று அர்த்தம் எனவும் கூறினார். மேலும் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனிடம் கடைசியில் “மாசுசஹா” என்று கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. “மாசுசஹா” என்றால் “எதற்கும் கவலைப்படாதே உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருந்து உன்னை காப்பேன்” என்று பொருள் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பரமாத்மா கூறிய அந்த “மாசுசஹா” என்பதைத்தான் `மாசுச’ என்று சுருக்கி அத்திரவரதரின் கையில் உள்ள கவசத்தில் பொறித்திருக்கிறார்கள் என கோயில் அர்ச்சகர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே:
ஆடி 18 ல் என்ன வாங்கினால் மேன்மேலும் பெருகும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar hand words in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar nindra kolam in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.

- Advertisement -