- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அத்தி வரதர் தரிசனத்தின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கும் ஒரு கோயிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இருக்கிறது. காரணம் இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் ஆகும். இந்த அத்தி வரதரின் தரிசனம் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. ஜூலை 1 முதல் 30 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் செய்து இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஜூலை 1 முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் தந்த அத்தி வரதர். ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார். அத்தி வரதரை தரிசிக்கும் வாய்ப்பு வாழ்வில் கிடைக்கின்ற அரிய வாய்ப்பு என்பதால் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் காஞ்சிபுரம் நகரத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெருக்கடியால் அத்தி வரதர் தரிசனத்திற்கு நீண்ட ஆகும் நிலை இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே அத்தி வரதரை சயனக் கோலத்தில் தரிசித்த பக்தர்கள், நின்ற கோலத்தில் வரதரை தரிசிப்பதற்கு மீண்டும் காஞ்சிபுரம் வருவதாலும், இன்னும் ஒரு வார காலமே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கப்பெறும் நிலை இருப்பதாலும் வழக்கத்திற்கு அதிகமாக பக்தர்களின் வருகையால் காஞ்சிபுரம் நகரம் ஜன நெருக்கடியால் தவிக்கிறது. இத்தகைய அளவு கடந்து பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி அனைவரும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தங்களால் இயன்றவற்றை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் அத்திவரதர் தரிசனத்திற்கு டோனர் பாஸ் வைத்திருந்த பக்தர்கள் நின்ற வரிசையில் கூட்ட நெருக்கடியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, அந்த வரிசை இருக்கும் சாலை ஓரத்தில் நின்றிருந்த சில பக்தர்கள் அங்கிருந்த மின்சாரக் கம்பத்தின் மீது மோதிய போது, அவர்களில் சிலருக்கு மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் நின்றிருந்த பக்தர்கள் பதற்றத்தில் ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்து ஏற்பட்ட களேபரத்தில் சில பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர்.

- Advertisement -

இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உடனடியாக அரசு அவசர கால ஊர்திகளை அங்கு வரவழைத்து காயம்பட்ட அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். யாருக்கும் மிகத் தீவிரமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் அத்திவரதர் தரிசனத்தின்போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. எனினும் இத்தகைய நிகழ்வுகள் தங்களை ஒருபோதும் அத்தி வரதர் தரிசனம் செய்யும் எண்ணத்தில் இருந்து பின்வாங்க செய்யப் போவதில்லை என பெரும்பாலான பக்தர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதமும் அத்திவரதர் தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் இறந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. அந்த நிகழ்வு பக்தர்களின் நிலைகளிலிருந்தும் அறிவதற்குள்ளாகவே இந்த சம்பவம் நடந்திருப்பது அனைவருக்குமே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar shock incident in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar festival in Tamil or Athi varadhar vizha in Tamil.

- Advertisement -