- Advertisement -

எதிரிகள் தொல்லையும் அவமானமும் நீங்க வாராகி வழிபாடு

- Advertisement -

கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளும், கண்ணுக்குத் தெரியாத துரோகிகளால் ஏற்படக்கூடிய அவமானங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் அவர்களை விட்டு துரோகிகளும் எதிரிகளும் விலகிச் செல்வதற்கும், அவர்களால் ஏற்பட்ட அவமானங்களும் ஏமாற்றங்களும் அசிங்கங்களும் துரோகமும் விலகிச் செல்வதற்கு வளர்பிறை பஞ்சமி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

எதிரிகள் தொல்லை நீங்க வழிபாடு

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் எதிரிகள் அல்லது துரோகிகள் என்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நம்முடைய முன்னேற்றத்தை கண்டு பொறாமை பட்டு அதன் விளைவால் நமக்கு தேவையில்லாத பிரச்சினைகளை தரக்கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் நம்மை விட்டு விலக வேண்டும் என்றால் நாம் உக்ர தெய்வ வழிபாட்டை தான் செய்ய வேண்டும். அப்படி உக்ர தெய்வ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வாராகி அம்மனை பஞ்சமி தினத்தன்று வழிபாடு செய்ய விரைவிலேயே அவர்களை கஷ்டப்படுத்தக் கூடிய நபர்கள் அனைவரும் விலகி ஓடுவார்கள் என்று கூறலாம்.

- Advertisement -

அந்த வகையில் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி அன்று ராகு காலமான காலை 9 மணியிலிருந்து 10:30 மணிக்குள் இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். வீட்டிற்கு அருகில் வாராகி அம்மனின் கோவில் இருக்கும் பட்சத்தில் அந்த கோவிலுக்கு சென்று வாராஹி அம்மனுக்கு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த வழிபாட்டு முறையை செய்யலாம். ஒருவேளை அருகில் ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டிலும் செய்யலாம்.

வீட்டில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனின் படம் இல்லை என்பவர்கள் வெறும் தீபத்தை மட்டும் ஏற்றிக் கொள்ளலாம். இப்பொழுது உங்களுடைய வலது உள்ளங்கையில் வெள்ளை உளுந்து அல்லது வெள்ளை மொச்சை எடுத்து வைத்துக்கொண்டு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.

- Advertisement -

அவ்வாறு கூறி முடித்த பிறகு உங்களுடைய எதிரிகள் மற்றும் துரோகிகள் உங்களை விட்டு விலக வேண்டும் என்றும் இது நாள் வரை நீங்கள் பட்ட அவமானங்களும், அசிங்கங்களும், ஏமாற்றங்களும் விலக வேண்டும் என்று வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து வேண்டிக்கொண்டு கையில் இருக்கக்கூடிய உளுந்து அல்லது மொச்சையை ஏதாவது ஒரு மரத்தின் அடியில் கொண்டு சென்று போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இதுவரை ஏற்பட்ட அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். மேலும் யாரால் நமக்கு கஷ்டங்கள் ஏற்பட்டதோ அவர்களும் நம்மை விட்டு நீங்குவார்கள்.

மந்திரம்

“ஓம் வம் வராகியை நமஹ”

இதையும் படிக்கலாமே:பைரவ அஷ்டகம் பலன்கள்

வாராகி அம்மனின் இந்த ஒரு வழிபாட்டை முழுமனதோடு யாரொருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு இதுவரை யாரால் எந்த கஷ்டம் ஏற்பட்டு இருந்தாலும் அந்த கஷ்டங்கள் நீங்குவதோடு அந்த நபரும் விலகிச் செல்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -