
வாஸ்து பகவான் தன்னுடைய நித்திரையிலிருந்து கண்விழிக்கக்கூடிய நாளையும் நேரத்தையும் தான் நாம் வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரம் என்று கூறுகிறோம். அப்பேற்பட்ட நேரத்தில் நாம் செய்யக்கூடிய வாஸ்து தொடர்பான செயல்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றியைத் தரும் என்றும் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருக்கும் பட்சத்தில் இந்த வாஸ்து நேரத்தை பயன்படுத்தி பரிகாரங்களை செய்து கொள்ளலாம் என்றும் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு கட்டுவதற்கும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பலரும் அறிந்ததே. அதே வாஸ்து நாளில் வாஸ்து நேரத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு சில பரிகாரங்கள் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கும். அப்படிப்பட்ட பரிகாரங்களில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானின் தீவிர பக்தனாக திகழ்பவர் தான் வாஸ்து பகவான். வாஸ்து பகவான் வருடத்திற்கு 8 முறை தான் கண்விழிப்பார். அந்த நேரத்தில் நாம் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பிப்பது, மண் மற்றும் மண் சார்ந்த செயல்களில் ஈடுபடும் பொழுது அதில் நமக்கு எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் அது விரைவிலேயே நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் வாஸ்து நாளில் மனையடி பூஜை செய்வது, வாசல் கால் வைப்பது, போர் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படி செய்வதோடு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலையும் வாஸ்து தோஷத்தையும் நீக்குவதற்கு ஒரு பரிகாரத்தையும் சேர்த்து செய்தோம் சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.
ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7:23 மணிக்கு தொடங்கி 7:59 மணி வரை வாஸ்து நேரம் என்பது இருக்கிறது. இந்த 36 நிமிடங்கள் நாம் வாஸ்து பகவானை நினைத்து வழிபாடு செய்வதன் மூலம் வாஸ்து பகவானின் அருளை பெற முடியும். இந்த நேரத்தில் பச்சை கற்பூரத்தை ஒரு தட்டிலோ அல்லது அகல் விளக்கிலோ வைத்து வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வைத்து விட வேண்டும். வாஸ்து நேரம் என்று கூறக்கூடிய இந்த 36 நிமிடங்கள் யார் ஒருவர் வீட்டு நிலை வாசலுக்கு வெளியே பச்சை கற்பூரம் இருக்கிறதோ அந்த வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். அதே சமயம் வாஸ்து தோஷமும் நீங்கும் என்று கூறப்படுகிறது. 36 நிமிடங்கள் நிறைவடைந்த பிறகு பச்சை கற்பூரத்தை நாம் நம்முடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே போல் இந்த 36 நிமிடங்களும் நம்முடைய வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக வாஸ்து பகவானை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு பச்சரிசி மாவினால் ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்தக் கோலத்தின் நான்கு புறங்களிலும் நான்கு அகல்விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த நான்கு தீபங்களும் நான்கு திசையை பார்த்து இருக்க வேண்டும். பிறகு தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து “ஓம் சிவாய நமோ நம” என்னும் மந்திரத்தை 36 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சொந்த வீடு கட்டுவதில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். வேறு ஏதாவது வாஸ்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அவையும் தீரும்.
இதையும் படிக்கலாமே: வாஸ்து குறைபாட்டை நீக்கும் கல் உப்பு பரிகாரம்
எளிமையான இந்த பரிகாரத்தை முழுமனதோடு வாஸ்து பகவானை நினைத்து வாஸ்து நாளில் வாஸ்து நேரத்தில் செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் தோஷமும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.