- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாஸ்து குறைபாட்டை நீக்கும் கல் உப்பு பரிகாரம்

வாஸ்து குறைபாட்டை நீக்கும் கல் உப்பு பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைப்பதற்கு முக்கியமான காரணம் நம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பதுதான். எவ்வளவு உழைத்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். அப்படி குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கும், அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கும், உடல்நிலை பாதிப்புகள், தொழிலில் நஷ்டம், வேலையில் சிரமம் என்று பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு வாஸ்து குறைபாடும் ஒரு காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வாஸ்து குறைப்பாட்டை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கல் உப்பு பரிகாரம்

சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீடு எந்தவித வாஸ்து குறைபாடும் இல்லாமல் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டிருந்தால் தான் அந்த வீட்டில் வசிக்கக் கூடிய நபர்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். ஒரு சில இல்லங்களில் நாம் குடியிருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுவே வேறு சில இடங்களில் குடியேறும் பொழுது அங்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை மட்டுமே அனுபவிப்போம். இதற்கான முக்கியமான காரணமாக தான் வாஸ்து குறைபாடு திகழ்கிறது. அப்படிப்பட்ட வாஸ்து குறைப்பாட்டை நீக்குவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7:23 மணியிலிருந்து 7:59 மணிக்குள் வரக்கூடிய வாஸ்து நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும். முதலாவதாக புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கு அல்லது பீங்கான் கிண்ணம் அல்லது கண்ணாடி கிண்ணம் வேண்டும். இதில் முதலில் அதில் சிறிதளவு கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். கல் உப்பு சமையலுக்கு உபயோகப்படுத்தாத புதிய கல் உப்பாக இருக்க வேண்டும். பிறகு நம்முடைய வீட்டின் வடகிழக்கு மூலையில் இருக்கக்கூடிய மண்ணை சிறிதளவு எடுத்து அந்த உப்பிற்கு மேல் போட வேண்டும்.

வீட்டிற்குள் மண் இல்லை என்றால் வீட்டிற்கு வெளியே வடகிழக்கு பகுதியில் இருக்கக்கூடிய மண்ணை கூட எடுத்து உபயோகப்படுத்தலாம். அந்த இடத்தில் செடிகள் வைத்து வளர்க்கும் பட்சத்தில் அந்த செடிகளில் இருக்கக்கூடிய மண்ணையும் பயன்படுத்தலாம். அந்த திசையில் இருந்துதான் மண்ணெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இதை அப்படியே வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்திற்கோ, சிலைகோ முன்பாக வைத்துவிட்டு “ஓம் வாஸ்து பகவானை நமஹ” என்னும் மந்திரத்தை 36 முறை கூறி வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து குறைபாடுகள் முற்றிலும் நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த கல்லுப்பும் மண்ணும் அன்று முழுவதும் அப்படியே விநாயகருக்கு முன்பாக இருக்கட்டும் அன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு இந்த கிண்ணத்தை எடுத்து வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைகளிலும் இருக்கும் நான்கு மூலைகளிலும் அரை நிமிடம் இருப்பது போல் வைக்க வேண்டும். இப்படி வீடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மூலைகளிலும் வைத்துவிட்டு இதை எடுத்துக்கொண்டு வீட்டை வெளிப்புறமாக ஒருமுறை சுற்றிவர வேண்டும்.

இப்படி சுற்றி வந்த பிறகு இந்த உப்பையும் மண்ணையும் ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். அருகில் ஓடுகின்ற தண்ணீர் இல்லை என்னும் பட்சத்தில் இந்த மாலை நேர பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக வீட்டிற்கு வெளியே ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு அந்த பக்கெட்டில் இந்த உப்பையும் மண்ணையும் போட்டு விட வேண்டும். உப்பு முழுவதும் கரைந்த பிறகு அதை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:அதிகாலையில் விளக்கு ஏற்றும் முறை

வாஸ்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் முற்றிலும் நீங்குவதற்கு வீட்டை இடித்து சேதப் படுத்தாமல் இப்படி எளிமையான பரிகாரத்தை முழுமனதோடு செய்து பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்