- Advertisement -

ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

- Advertisement -

முருகனுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டும். அவனுடைய பாதத்தில் ஒரு சிறு இடம் கிடைக்க வேண்டும் என்று ஏங்க கூடிய உள்ளங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எல்லோராலும் முருகனை ஆத்மார்த்தமாக உணர முடியுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. முருகனை உங்களுக்குள் காண வேண்டும் என்றால் என்ன செய்வது.

எத்தனை கோவில்களுக்கு சென்று நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும் சரி, உங்கள் மனது என்னும் கோவிலுக்குள் ஒரு கோவில் கட்டி அந்த இடத்தில் முருகனை குடி வைத்து தினம் தினம் பூஜை செய்து, அபிஷேக ஆராதனை செய்து வழிபாட்டால் மட்டுமே முருகனை உங்களால் உணர முடியும். புற கண்களில் முருகனைக் காண்பதை விட அக கண்களில் முருகனைக் காண வேண்டும்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. கோவில் வழிபாடும் முக்கியம் இருப்பினும் தினம் தினம் இந்த அக வழிபாடு, குகன் வழிபாடு சிறந்தது. உள்ளத்தில் வைத்திருக்கும் முகம் முருகனை “குகன்” என்று சொல்லுவார்கள்.

முருகனை அப்பாவாக நினைத்து வழிபட்டால் அப்பாவின் அரவணைப்பு கிடைக்கும். அம்மா மகன் நினைத்து வழிபட்டால் அம்மாவின் பாசம் கிடைக்கும். உடன்பிறந்தவனாக நினைத்து வழிபட்டால் பாதுகாப்பு கிடைக்கும். தோழனாக நினைத்தால் சந்தோஷம் கிடைக்கும். இப்படி முருகனை உங்களுக்கு எந்த விதத்தில் வழிபாடு செய்ய முடியுமோ, அந்த விதத்தில் முருகனை நெருங்கப்பாருங்கள். நிச்சயமாக முருகனை உணரும் பாக்கியம் கிடைக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று பங்குனி உத்திர திருநாள். வந்திருக்கிறது‌‌.

- Advertisement -

இந்த நாளில் முருகனிடம் நாம் சரணடைய வேண்டும், அந்த உணர்வை நாம் அடைய வேண்டும் என்றால், என்ன மந்திர வார்த்தைகளை சொல்லி முருகனை வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு சின்ன தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

ஆத்மாத்தமாக சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
என்னை வாழ வைக்கும் தந்தைக்கு அரோகரா
என்னை வாழ வைக்கும் அன்னைக்கு அரோகரா !

- Advertisement -

என்னை வாழ வைக்கும் தெய்வத்திற்கு அரோகரா!
என்னை வாழ வைக்கும் முருகனுக்கு அரோகரா.

என்று இந்த மந்திர வார்த்தைகளை சொன்னாலே போதும். உங்களுடைய மனதில் முருகன் குடியேறி வருவான். அவனுடைய பாதத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும். ஆமாங்க அரோகரா அரோகரா என்ற வார்த்தையை சத்தத்தோடு எவன் ஒருவன் முருகனை நினைத்து உள்ளம் உருக சொல்கின்றானோ, அவர்களுடைய உள்ளத்தில் முருகன் நிரந்தரமாக குடியேறுவான் என்பதுதான் வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை. இதுதான் நிதர்சனமான உண்மை கூட.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி வசிய வழிபாடு

நீங்கள் வேண்டுமென்றால் இன்று, என்னை வாழவைக்கும் முருகனுக்கு அரோகரா என்று கோஷத்தை எழுப்பி பாருங்களேன். குடும்பத்தோடு பூஜை அறையில் அமர்ந்து அந்த முருகனுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இரண்டு வாழைப்பழங்கள் நெய்வேதியம் வைத்துவிட்டு, கொஞ்சம் உதிரி புஷ்பங்களை கையில் எடுத்துக் கொண்டு முருகனுக்கு சமர்ப்பணம் செய்து 6 முறை சரவணபவ மந்திரத்தை சொல்லி, என்னை வாழ வைக்கும் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி தான் பாருங்கள். பிறகு நடப்பதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. ஆத்மார்த்தமாக அதை உணர்வுகளால் மட்டுமே சொல்ல முடியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -