
நாம் அனைவரும் பணத்தை ஏதாவது ரூபத்தில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட பணம் ஏதாவது ரூபத்தில் செலவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு திடீரென்று எதிர்பாராத செலவுகள் என்பது உண்டாகும். அந்த செலவுகளை சமாளிப்பதற்குரிய பணவரவு இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அந்த பணவரவை பெறுவதற்காக பலவிதங்களிலும் முயற்சி செய்வார்கள். இருப்பினும் அந்த முயற்சிகள் எதுவுமே வெற்றி அடையாமல் பண தேவைக்காக கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாம் பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் வராமல் இருக்கும் பட்சத்திலோ அல்லது நம்முடைய தேவைக்காக பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் கடன் எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் முழு நம்பிக்கையோடு நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்க்காத முறையில் நம்மிடம் பணம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு மிகுந்த எளிமையான பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். இந்த ஞாயிற்றுக்கிழமை செய்ய இயலவில்லை என்பவர்கள் அடுத்து வரக்கூடிய எந்த ஞாயிற்றுக்கிழமை வேண்டுமானாலும் செய்யலாம். இது ஒரு தாந்திரீக பரிகாரம் என்பதால் இதற்கு எந்தவித நிபந்தனைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நியாயமான பண தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய பணவரவு உண்டாகும்.
இது பிரபஞ்சத்திடம் நேரடியாக நாம் வைக்கக்கூடிய ஒரு வேண்டுதலாகவே கருதப்படுகிறது. பிரபஞ்சத்திடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலுக்குரிய பரிகாரத்தை செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இறப்பு தீட்டு பிறப்பு தீட்டு போன்ற எந்த தீட்டுகளில் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு பொருள்தான் வேண்டும். அதுதான் ஆரஞ்சு நிறத்தில் எழுதக்கூடிய பேனா அல்லது ஸ்கெட்ச். இதை மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு எதுவுமே வேண்டாம்.
அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். யாருடைய தொந்தரவும் அங்கு இருக்கக்கூடாது. போன், டிவி சத்தம் கேட்கக் கூடாது. இப்பொழுது ஆழமாக மூன்று முறை மூச்சை இழுத்து மெதுவாக விடுங்கள். பிறகு உங்களுடைய இரண்டு கைகளையும் நன்றாக ஒன்றோடு ஒன்று தேய்த்து அதில் வரக்கூடிய சூட்டை உணர்ந்து அந்த சூட்டை உங்களுடைய கண்களிலும் தலையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக உங்களுடைய இடது உள்ளங்கையில் அந்த பேனாவை வைத்து ஒரு பெரிய வட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்த வட்டத்திற்குள் “Cash Flow” என்று எழுத வேண்டும். அதற்கு கீழே “318 614 518 714” என்னும் எண்களை இடைவெளி விட்டு மேலே எப்படி எழுதப்பட்டிருக்கிறது அப்படி எழுத வேண்டும்.
எழுதி முடித்த பிறகு உங்களுக்கு அவசரமாக எவ்வளவு பண தேவை இருக்கிறதோ அந்த பணம் உங்களுடைய கைகளில் இருப்பதைப் போல் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அந்த பணம் வந்த பிறகு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தீர்களோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருப்பது போல் கற்பனை செய்ய வேண்டும். முக்கியமான குறிப்பு நியாயமான, அவசரமான, அவசியமான பண தேவைக்காக தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆடம்பரமான பண தேவைக்காக இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அதனால் பலன் கிடைக்காது. முழு மனதோடும் முழு நம்பிக்கையோடும் யாரிடமும் சொல்லாமல் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு எந்த அளவிற்கு அவர்கள் நம்பிக்கையோடு செய்கிறார்களோ அந்த அளவிற்கு விரைவில் பணத்தேவை பூர்த்தி அடையும்.
இதையும் படிக்கலாமே: ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய கன்னி தெய்வ வழிபாடு
எந்தவித சந்தேகமும் இல்லாமல் முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் கண்டிப்பாக பணத்தேவை பூர்த்தியடையும் என்ற நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையை பொறுத்து பணத்தேவை பூர்த்தியடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.