- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

இவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழிபட்டதற்கு சமம்

நம்முடைய ஜாதக தோஷங்கள் விலக நவகிரகங்கள் ஒவ்வொருவரையும் தனி தனியாகவும் சேர்த்தும் வழிபடுவது வழக்கம். ஆனால் நவகிரகங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஒரு கோவிலில் அமசமாக கட்சி அளிக்கிறார் பைரவர். அவரை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாகவே ஒவ்வொரு பைரவரின் வடிவமும் ஒரு கிரகத்தினை குறிப்பதாக நூல்கள் குறிக்கின்றன

- Advertisement -

சுவர்ணாகர்ஷணபைரவர் – சூரியன்
கபால பைரவர் – சந்திரன்
சண்ட பைரவர் – செவ்வாய்
உன்மத்த பைரவர் – புதன்
அசிதாங்க பைரவர் – குரு

ருரு பைரவர் – சுக்கிரன்
குரோதன பைரவர் – சனி
சம்ஹார பைரவர் – ராகு
பீஷண பைரவர் – கேது

- Advertisement -

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை மல்லிகார்ஜூனர் கோவிலில் ஒரு பைரவ சிலை உள்ளது. அந்த அற்புத சிலையானது அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னனால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்குள் 12 ராசிகளும் அவற்றுக்கான நட்சத்திரங்களும் அடக்கம் என்று கூறப்படுகிறது.

பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.

இதையும் படிக்கலாமே:
மாட்டு சாணத்தில் ஒளிந்துள்ள மகிமைகள் – ஒரு அலசல்

பைரவரின் தலை மேஷ ராசியையும், வாய் ரிஷப ராசியையும், கை மிதுன ராசியையும், வயிறு-சிம்ம ராசியையும், இடை-கன்னி ராசியையும், புட்டம்-துலா ராசியையும், லிங்கம்- விருச்சிக ராசியையும், தொடை-தனுசு ராசியையும், முழந்தாள்- மகர ராசியையும், காலின்கீழ் பகுதி- கும்ப ராசியையும், பாதம்- மீன ராசியையும் குறிக்கிறது என்று நூல்கள் சொல்கின்றன.

- Advertisement -