மாட்டு சாணத்தில் உள்ள அறிவியல் ரகசியங்கள் – ஒரு பார்வை

0
2380
cow
- விளம்பரம் -

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பசுவையும் காளைமாட்டையும் வளர்ப்பதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர். அவர்கள் பல காலம் நோய் நொடி இன்றி வாழ மாட்டு சாணம் ஒரு வகையில் உறுதுணையாக இருந்தது என்றே கூறலாம். மாட்டு சாணத்தில் ஒளிந்துள்ள பல அளப்பரிய அறிவியல் ரகசியங்களை பற்றி அலசுவோம் வாருங்கள்.

cow dung

வீட்டிற்கு வீடு மாடு இருந்த காலகட்டத்தில் அந்த வீட்டில் வசிற்பவர்கள் காலையில் எழுந்ததும் மாட்டு தொழுவத்தில் உள்ள கோமியத்தையும் சாணத்தையும் சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அப்படி சுத்தம் செய்வதன் மூலம் கையில் உள்ள நுண் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். மாட்டு சாணமும் கோமியமும் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பதால் இவை இருக்கும் இடங்களில் கிருமிகள் அண்ட வாய்ப்பே இல்லை.

Advertisement

இன்றும் நமது கிராமங்களில் சாணத்தை கொண்டே வாசல் தெளித்து கோலமிடுகின்றனர். சாணம் கொண்டு வாசல் தெளிப்பதன் மூலம் நாம் வெறுங்காலோடு வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது நம் காலில் ஒட்டியுள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். அதோடு வீட்டினுள் எந்த கிருமியும் அண்டாதவாறும் அந்த சாணம் ஒரு கவசம் போல காக்கும்.

cow dung

சாணமானது இன்றளவும் ஒரு மிக சிறந்த உரமாக பயன்படுகிறது. அதனாலேயே மாட்டு சாணத்தை சேமித்து அதை இன்றளவும் பயிருக்கு உரமாக இடுகின்றனர். இந்த இயற்கையான உரத்தின் மூலமே பயிர்கள் செழிப்பாக வளரும் என்பது நவீன அறிவியல் கண்ட உண்மை. ஆனால் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து பயன்படுத்தினான் பழந்தமிழன்.

cow dung

நாம் தினமும் நெற்றியில் இட்டுக்குள்ளும் திருநீறும் சாணத்தில் இருந்து தயாராகிறது. விபூதி மட்டுமா, பல் போடி, கொசு விரட்டி, சாம்பிராணி என பல பொருட்கள் மாட்டு சாணத்தின் மூலம் தயாராகிறது. மயிலையில் உள்ள முண்ட கன்னி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் வறட்டியை உபயோகப்படுத்தி பொங்கல் வைப்பது வழக்கம். அந்த வரட்டியால் உண்டாகும் சாம்பலே அங்கு பிரசாதமாக தரப்படுகிறது.

சாணம் நாற்றம் பிடித்தது, அதை எல்லாம் தொடக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் நமக்குள் இருந்த கலாச்சாரத்தை மாற்றினார்கள். ஆனால் இன்று அவர்களே சாணத்தை விற்க தொடங்கி உள்ளனர். கூகிளில் சென்று “cow dung” என தேடி பாருங்கள். ஒரே ஒரு வரட்டியின் விலை குறைந்தது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
அரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

அறிவியல் ரீதியாக பல நன்மைகளை தரும் இந்த சாணம் மாட்டில் இருந்தே கிடைக்கிறது. ஆகையால் மாடுகளை வளர்ப்போம், இயற்கையை காப்போம் சாணத்தின் மூலம் அறிவியலில் பல சாதனைகள் புரிவோம்.

Advertisement