- Advertisement -

எந்த ஒரு செயலிலும் மனிதர்களாகிய நாம் அதில் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க தான் முடியுமே தவிர, அச்செயலின் பலன் இறைவன் நினைத்த படி தான் நடக்கும் என்பது அனுபவசாலிகளின் வாக்கு. இன்று பலருக்கும் குழந்தைப்பேறின்மை, சொத்துக்களை இழப்பது, திருமண தடை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிவபெருமானின் அகோர ரூபத்தில் இருந்து தோன்றியவர் “பைரவர்”. மேற்கண்ட பிரச்சனைகளுக்குகாக சில குறிப்பிட்ட முறைகளில் பைரவருக்கு பரிகாரம் செய்து வழிபடுவதால் அப்பிரச்னைகள் நீங்கும்.

பைரவர் பரிகார வழிபாட்டு முறை

திருமணம் நடக்காமல் தடையேற்படுவது அல்லது திருமணம் கால தாமதம் ஆவது போன்ற விடயங்களால் கவலைப்படுபவர்கள், ஒரு ஒன்பது ஞாயிற்று கிழமைகளில் சிவன் கோவில்களில் இருக்கும் பைரவமூர்த்தியை, ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், திருமண தடை தாமதம், சரியான வரன்கள் அமையாமை போன்றவை நீங்கும்.

- Advertisement -

ஆறு சனிக்கிழமை தினங்களில், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஆறு நெய்தீபங்களை பைரவருக்கு ஏற்றி, வழிபடுவதால் சனியால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்றவையின் தாக்கங்கள் குறையும்.

திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை பேறில்லாமல் தவிக்கும் தம்பதியினர், ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்களில், பைரவ மூர்த்திக்கு செவ்வரளி பூக்களை மாலையாக சாற்றி, செவ்வாழைப்பழங்களை நிவேதனமாக வைத்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டு பின்பு ஏழை குழந்தைகளுக்கு அன்னதானமளித்தால் பைரவ மூர்த்தி நன்மக்கள் பேற்றை அளிப்பார். இந்த பரிகார வழிபாடு நமது உடல் நோய்கள் மற்றும் குடும்பத்தில் இருக்கும் வறிய நிலையையும் போக்கும் தன்மை கொண்டதாகும்.

- Advertisement -

சொத்துக்களை இழந்தவர்கள் மற்றும் தங்களுக்கு மிக அவசியமான பொருட்கள், உடமைகளை இழந்தவர்கள் 27 மிளகுகளை எடுத்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து, மண்ணாலான அகல்விளக்கில் அம்முடிப்பை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரிபோட்டு பைரவரின் சந்நிதியின் முன்பு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி 27 தினங்கள் தொடர்ந்து செய்து வர இழந்த சொத்துகளும், பொருட்களும் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். தினந்தோறும் உங்கள் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு பிஸ்கேட், புரை அல்லது வேறு ஏதேனும் உணவை கொடுத்துவருவது பைரவ சாபத்தை நீக்கும். இதனால் உங்கள் வீட்டில் துஷ்ட சக்திகள் நுழைவது, திருடர்கள் பயம் போன்றவை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கிருஷ்ணகிரி கால பைரவர் கோவில் சிறப்புகள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bhairavar pariharam in Tamil or Kalabhairava pariharam in Tamil. It is also called as Bhairava valipadu in Tamil or Bhairava vilakku valipadu in Tamil.

- Advertisement -